Listen

Description

பரம சத்தியத்தில் பரவசம் | ஃப்ரைடே, 9 ஜூலை 2021

சுவிசேஷத்தை குறித்து வெட்கப்படாதீர்கள்

பாஸ் டர் கிறிஸ்

அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற        அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்... (பிலிப்பியர் 3: 8).

இன்று உலகில் நடக்கும் சில காரியங்களை குறித்து நான் ஆராய்ந்து பார்க்கும் போது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் அர்ப்பணிப்பு என் நினைவிற்கு வருகிறது. அவர்கள் ராஜாவை நோக்கி, "நீர் நிறுத்தின பொற்சிலையை நாங்கள்  பணிந்து கொள்ளமாட்டோம்" என்றார்கள். ராஜா கோபமடைந்து அவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலே போடுவதாக அச்சுறுத்தினான். அவர்கள் ராஜாவை நோக்கி "நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; விடுவிக்காமற்போனாலும், நாங்கள் நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளமாட்டோம்"  என்று தைரியமாக கூறினார்கள். (தானியேல் 3ம் அதிகாரத்தை வாசியுங்கள்). 

அவர்கள் ராஜாவின் சிலையை வணங்க மறுத்தது, தேவன் அவர்களை விடுவிப்பார் என்ற எதிர்பார்ப்பினால் அல்ல. அவர்கள் எரிகிற சூளையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் விடுவிக்கப்படாவிட்டாலும் அவர்களுக்கு அது ஒரு பொருட்டல்ல. தேவன் ஒருவரே மெய்யானவர் என்று அறிந்ததினால் அவர்கள் தங்கள் அர்ப்பணிப்பில் உறுதியாய் நின்றார்கள். ஆகவே அந்த மிரட்டலுக்கு அவர்கள் அடிபணியவில்லை!   என்ன ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை!

தானியேலின் காரியமும் இதை போன்றது தான். முப்பது நாள் வரையும் ராஜாவை தவிர வேறே எந்த தேவனையும்  நோக்கி விண்ணப்பம் பண்ணாதபடி கட்டளை பிறந்தது.  ஆனால் தானியேலோ தொடர்ந்து தேவனை  நோக்கி விண்ணப்பம்   செய்தார்; வேதம் கூறுகிறது, தானியேல் ஜெபத்திற்கு எதிராக கட்டளை பிறந்தது என்று அறிந்திருந்தும், அந்த மனுஷர் அவன் ஜெபம் செய்கிறதை காண்கிறார்கள் என்று தெருந்திருந்தும், முன் போலவே  தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான். (தானியேல் 6 :6 -10  )

ராஜாவினுடைய கடுமையான கட்டளைக்கு அடிப்பணியாதபடியால் தானியேல் சிங்க கெபியில்  போடப்பட்டான்.  சிங்க கெபியிலிருந்து தன்னை விடுவிக்கும் படியாய் தானியேல் ஜெபித்ததாக எந்த பதிவும் இல்லை. தேவன் மேலுள்ள  தன் விசுவாசத்தை மறுதலிப்பதை விட சிங்கங்கள்  அவனை பீறிப்போட அவன் தயாராக இருந்தான். இவை நமக்கு எடுத்துக்காட்டுக்களாக வைக்கப்பட்டிருக்கின்றன. இன்று நம் சூழ்நிலை மாறுபட்டவை அல்ல. தேவன் என்ன  சொன்னார்  மாறாக மற்றவர் என்ன  சொல்கிறார்கள் என்று வரும் போது,  தேர்ந்தெடுப்பதற்கு இது ஒன்றும் கடினமானது அல்ல; செல்ல ஒரே ஒரு வழி மட்டுமே  உண்டு - இயேசு மாத்திரமே!  கர்த்தராகிய கிறிஸ்துவை நாம் சேவிக்கிறோம். சுவிசேஷத்திற்கான அறைகூவல் வரும்போது வாழ்வோ சாவோ, நாம் கர்த்தருடையவர்கள்! அல்லேலூயா!  

கிறிஸ்துவை குறித்ததான நம்பிக்கை மற்றும்  சுவிசேஷ செய்தியை   அறிக்கையிட நீங்கள் வெட்கப்படவோ, பயப்படவோ, தயங்கவோ வேண்டாம். நாம் தயாராக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் கொடுத்து விட்டு, தங்கள்  விடுதலைக்காக விண்ணப்பிக்காதவர்கள் வம்சத்தில் நாம் வந்துள்ளோம்; அவர்கள் மேன்மையான வெற்றியுள்ள உயிர்த்தெழுதலை வாஞ்சித்தார்கள். என்ன வந்தாலும் அதைரியப்படாதீர்கள்; இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள  விசுவாசத்தை பற்றி தைரியமாய் இருங்கள். சுவிசேஷத்தின் சத்தியத்தை நம்பி, நிறைவேற்றி, தைரியமாய் பிரசங்கியுங்கள்.

அறிக்கை : நான் சுவிசேஷத்தின் சத்தியத்தை நம்பி, நிறைவேற்றி, தைரியமாய் பிரசங்கிக்கிறேன். இயேசு கிறிஸ்துவை பறைசாற்றுவதில் ஏற்படும் துன்பத்திற்கு பயப்பட மறுக்கிறேன். கிறிஸ்துவின் மேலுள்ள என் அன்பையும், சுவிசேஷத்தின் மேலுள்ள என் வாஞ்சையையும் தணிக்க இந்த உலகில் உள்ளவைகளால்  முடியாது. நான் தைரியமாய்  எங்கும் பிரசங்கிக்கிறேன், அவர் என்னோடு எனக்குள்  இருக்கிறார், வார்த்தையை அடையாளங்களினால் உறுதிப்படுத்துகிறார். தேவனுக்கே மகிமை!

மேலும் தியானிக்க : 2 தீமோத்தேயு 3:12; அப்போஸ்தலர் 20:22-24