Listen

Description

சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- கலைச்செல்வி - நேர்காணல் பகுதி2- காந்தி மீது எழுத்துலகப் பிரயாணம் - சரஸ்வதி தியாகராஜன்

யூடியுப்: https://youtube.com/@thamils

இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/

வடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்

காணொளி: சரஸ்வதி தியாகராஜன்.

எழுத்தாளர் கலைச்செல்வி அவர்கள் எழுத்துலகத்தின்

மிகச்ச் சிறந்த படைப்பாளரில் ஒருவர். . இதுவரை வலி, இரவு, சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது, மாயநதி, கூடு , சமர்க்களம் என்கிற சிறுகதை நூல்களும், சக்கை, புனிதம், அற்றைத் திங்கள், ஆலகாலம், காந்தியைத் தவிர காந்தியை வேறு யாரால் கொல்ல முடியும்?,

ஹரிலால் த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தேய்புரி பழங்கயிறு என்கிற நாவல்களும் வெளிவந்துள்ளன.

இவர் பெற்றுள்ள விருதுகளும் ஏராளம்.

பொதுப்பணித் துறையில் பணி புரிபவர்.

இவர் திருப்பூர் தமிழ்ச் சங்க விருது , தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் வழங்கிய அழகியநாயகியம்மாள் விருது , திருப்பூர் அரிமா சங்கம் சக்தி விருது , புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சி விருது , இலக்கியச் சிந்தனை விருது , “தாழ்வாரம்“ சிறந்த சிறுகதைத்தொகுப்புக்கான விருது, Sparrow விருது 2021 போன்ற தமிழின் குறிப்பிடத்தகுந்த விருதுகளைப் பெற்றுள்ளார்

இவரது படைப்புகளான சக்கை நாவல் புத்தனாம்பட்டி நேரு மெமோரியல் கல்லுாரி, பி.ஏ. பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. கூடு சிறுகதை நூல் கோவை அரசுக் கலைக்கல்லுாரியில் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

காந்தி மீது ஈர்ப்பு எப்படி வந்து ஹரிலால் s/o மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற நாவலும் தேய்புரி பழங்கயிறு எழுதியது பற்றியும் கூறுகிறார். மேலும் அவர் கலந்து கொண்ட நியூ யார்க்கில் நடந்த Living Tamil LitFest நிகழ்ச்சியில் தன் அனுபவம் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.