முந்தைய பதிவில் ஜிபிடி பற்றித் தெரிந்து கொண்டோம். இப்பொழுது எல்.எல்.எம். ஜிபிடி-க்கும் என்ன வித்தியாசம்? அவற்றின் செயல்பாடுகள் எப்படி மாறுபடுகிறது? எல்.எல்.எம்.-க்கும் ஜிபிடி-க்கும் - எவ்விதம் அவற்றின் பயன்பாடுகள் வேறு வேறு விசயங்களுக்கு உபயோகம் ஆகின்றன? எதை எதற்கு எப்படி உபயோகிக்கலாம்?மொழி மாதிரிகளும் பெரிய மொழி மாதிரிகளும் (LLMகள்) - சரி. சின்ன மொழி மாதிரி என்றால் என்ன... எங்கே பயன்படும்? பெருசுக்கும் சிறுசுக்கும் என்ன வித்தியாசம்?சிறிய மொழி மாதிரிக்கு கம்மியாக காசு செலவழியுமா? குறைந்த பணத்தில் நிறைந்த பயனை அடையலாமா? பெரிய மொழி மாதிரி ஏன் இவ்வளவு கொள்ளைப் பணம் கேட்கிறார்கள்?சீனாக்காரர்கள் டீப் சீக் என்று சகாய விலையில் ஒன்றை நயா பைசா காசு வாங்காமல் உலவ விட்டிருக்கிறார்களாமே? ஏன்? அதன் ’ஆழ் ஆராய்ச்சி’யையும் பெர்ப்ளெசிட்டி, ஜெமினி, டிவிட்டர்/எக்ஸ் குரோக், கிளாட் (கிளவுட்!?) - எல்லாவற்றையும் சீர்தூக்கி ஒப்பிடுங்களேன்எல்லாம் கற்றுக் கொண்டு விட்டோம் தானே!? இன்னும் புதியதாக அடுத்து வரப் போவது பற்றி முன்னோட்டம் விட முடியுமா? வலுவூட்டல் கற்றல் (Reinforcement learning) என்கிறார்கள். தன் முடிவை விளக்கக் கூடிய புத்திசாலி ஏஐ என்கிறார்கள். அதெல்லாம் ஆராய்ச்சியாளர்களின் கற்பனையா? நிஜமா?