Listen

Description

Ambai | short story | Katil Oru Maan |

சொல்வனம் | எழுத்தாளர் | அம்பை |சிறுகதை | "காட்டில் ஒரு மான்"

எழுத்தாளர் அம்பை - சிறு முன்னுரை.

தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவரான அம்பை (Ambai) என்கிற சி. எஸ். லக்‌ஷ்மி (C. S. Lakshmi) 1944 -ம் ஆண்டு பிறந்தார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பும், பெங்களுரூவில் முதுகலைப் படிப்பும் கற்ற அம்பை, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

பதின்பருவத்திலேயே எழுத ஆரம்பித்த அம்பையின் கதைகளில் பெண்களின்உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் மிக அழகாக வெளிப்படுகின்றன. இவர், பல பெண் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விடயங்களை சர்வ சாதாரணமாக தொட்டுச் செல்பவர். இவர் தமது இயற்பெயருடன் ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.

”SPARROW” (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக இவர் செயல்பட்டு வருகிறார். சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' என்ற அவரது சிறுகதைத் தொகுப்புக்காக இவருக்கு 2021- ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan