சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம்
'புகையும் நிஜங்கள்'- சிறுகதை குறித்த உரையாடல்
எழுத்தாளர்: H. N. ஹரிஹரன்
உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன்
கதையை வாசிக்க: https://solvanam.com/2025/03/23/புகையும்-நிஜங்கள்/
H. N. ஹரிஹரன்
விருப்ப ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி.
1981 முதல் கதைகள் எழுதி வருகிறார். கல்கி,ஆனந்தவிகடன், கணையாழி, குமுதம் ஆகிய பிரபல பத்திரிக்கைகளிலும், பூபாளம் சிற்றிதழிலும் சிறுகதைகள் வெளியாகி இருக்கின்றன.
பூபாளம் இதழின் நிர்வாக ஆசிரியராக இருந்திருக்கிறார். இப்போதும் அதன் இதழின் ஆசிரியர் குழுவில் இருந்து வருகிறார்.
வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் எழுதத் துவங்கியிருக்கிறார். சமீபத்தில் சொல்வனம், கல்கி, குமுதம், பூபாளம், லேடீஸ் ஸ்பெஷல், அமுதசுரபி பத்திரிக்கைகளிலும், குவிகம், சொல்வனம் மின்னிதழ்களிலும் அவரது கதைகள் வெளியாகி உள்ளன.
‘எல்லாம் தெரிந்தவள்', 'கனவுச் சங்கிலி', ‘அப்பாவின் சைக்கிள்’, ‘கல்லடிப் பாலம்' எனும் நான்கு சிறுகதைத் தொகுப்புகளும், 'நீ இன்றி அமையாது உலகு' எனும்
குறும்புதினத் தொகுப்பும் வெளியாகி உள்ளன.
‘The Moplah Rebellion, 1921' எனும் ஆங்கில நூலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ‘மாப்ளா கிளர்ச்சி, 1921’ எனும் தலைப்பில், 2021ம் ஆண்டு வெளியானது.
தவிரவும், 'சார்தாம் யாத்திரை- பயணக்கட்டுரை', 'நன்மை தரும் நால்வர் பதிகங்கள்', 'பதினாறு பேறுகளையும் அளிக்கும் திருப்புகழ்' எனும் ஆன்மீக நூல்களும், 'நெகிழிவயலும், நியூசிலாந்து தமிழ் மணியும்' எனும் கட்டுரைத் தொகுப்பும் அமேசான் கிண்டில் மூலம்
பிரசுரிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு சிறுகதைப் போட்டிகளில் பங்கேற்று அவரது கதைகள் பிரசுரமாகியிருக்கின்றன.
2023ல் குங்குமம் பத்திரிகையில் வெளியான அவரது ‘கல்லடிப் பாலம்' எனும் சிறுகதை, 2023-24ம் வருடத்தின் சிறந்த சிறுகதையாக மூன்றாம் பரிசைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மூத்த எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது பெயரிலேயே வழங்கப்படும் பரிசாகும் இது.
கல்லடிப் பாலம்' எனும் சிறுகதை, குங்குமம் இதழின் சிறந்த சிறுகதையாக மூன்றாம் பரிசைப் பெற்றது.
இவரருடைய “புகையும் நிஜங்கள்” சிறுகதை நகர்ப்புற வாழ்க்கையின் சிக்கல்களை உணர்வுபூர்வமாக விவரிக்கிறது. செந்தில் என்ற கதாநாயகனின் வாழ்க்கை, குடும்ப உறவுகள், வாடகை வீட்டு மாற்றத்தில் சுடுகாட்டின் அருகில் வாழும் அனுபவங்கள் மூலம், சமூக மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் அதாவது தாயின் மனநிலை போன்றவை வெளிப்படுகின்றன.