நான்ஸி க்ரெஸ் மிக்க வெற்றி கண்ட ஒரு அமெரிக்க அறிவியல் புனைகதை ஆசிரியர். 1948 இல் பிறந்த இவர் ‘78இலிருந்து எழுதுகிறார். 1991ல் இவர் எழுதிய ‘ஸ்பெயினின் பிச்சைக்காரர்கள்’ என்ற குறுநாவல் இவரை புகழேணியில் ஏற்றியது. அதை விரித்து எழுதி, 1993-’96 காலகட்டடத்தில் வெளிவந்த இவருடைய வலுவான மாற்றுக் கற்பனை நாவல்கள் மூன்றும் 90களில் மிகக் கவனிக்கப் பட்ட அறிவியல் நவீனங்கள். அந்நாவல்கள் – ஸ்பெயினின் பிச்சைக்காரர்கள் (1993), பிச்சைக்காரர்களும் தேர்ந்தெடுப்பாரும் (1994) பிச்சைக்காரர்களின் பவனி (1996). [Beggars in Spain, Beggars and Choosers, Beggars ride]. சுமார் 20 நாவலகளும் பல சிறுகதைத் தொகுப்புகளும், கதைகள் எப்படி எழுதுவது என்று சொல்லித் தரும் நூல்களும் எழுதியுள்ள இவர் 2009 இல் கூட அமெரிக்க அறிவியல் நவீனங்களுக்கான முக்கியப் பரிசான ஹுகோ பரிசைத் தன் குறுநாவல் ஒன்றுக்குப் பெற்றார். பொதுவாக மரபணு மாற்றம் குறித்தும், மிக்க அறிவுள்ளவர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் உள்ள உறவு குறித்தும் நிறைய கதைகள் எழுதியவர். இங்கு பிரசுரமாகும் கதையான ‘Margin of Error’ குறித்து இவர் தன் வலைப் பக்கத்தில் எழுதியதன் சாரம் கீழே.
‘சில எழுத்தாளர்கள் நீளமாக எழுதுபவர்கள். சிலர் சுருக்கமாக. நான் நடுவகை. எனக்குப் பிடித்த வடிவம் குறுநாவல். என் விருப்பப்படி எழுத விட்டால் நான் அனேகமாகக் குறுநாவல்கள்தான் எழுதுவேன். பல நேரம் பிரசுரகர்த்தர்கள் நாவல் எழுதச் சொல்கிறார்கள். பதிப்பாசிரியர்களோ மிகச் சிறிய கதைகளை எழுதச் சொல்லித் துன்புறுத்துகிறார்கள். எல்லன் டாலோ, ஆம்னி பத்திரிகையின் புனை கதைப் பதிப்பாசிரியர், என்னை 2000 வார்த்தைகளுக்குள் ஒரு கதை கேட்டார். நான் சுணங்கினேன், அவர் விடுவதாயில்லை. எனவே இதை 2200 வார்த்தைகளில் எழுதினேன். அதை விடக் குறுக்க என்னால் முடியவில்லை. இத்தனைக்கும் இக்கதையில் ஒரே ஒரு காட்சிதான், மூன்றே பாத்திரங்கள்தான் பேசுகிறார்கள், ஒரு தவளை இருக்கிறது, இலலை என்கவில்லை. இது ஒரு வழக்கமான கதையாயிருந்தால் தவளைக்கு ஒரு தடவையாவது (’ரிப்பிட்’ ) என்று குரல் கொடுக்க வாய்ப்பு கிட்டியிருக்கும். ’
Title: Margin of ErrorTitle Record # 40626
Author: Nancy Kress
Date: 1994-10-00
Type: SHORTFICTION
Length: short story
Born in Buffalo, New York, Nancy Kress now lives in Brockport, New York. She began selling her elegant and incisive stories in the mid-seventies, and has since become a frequent contributor to Asimov's Science Fiction, The Magazine of Fantasy and Science Fiction, Omni, and elsewhere. Her books include the novels The Prince Of Morning Bells, The Golden Glove, The White Pipes, An Alien Light, and Brain Rose, the collection Trinity And Other Stories, the novel version of her Hugo and Nebula-winning story, Beggars in Spain, and a sequel, Beggars and Choosers. Her most recent books include a new collection, The Aliens of Earth, and a new novel, Oaths & Miracles. She has also won a Nebula Award for her story "Out of All Them Bright Stars."
In the chilling little story that follows, she reaffirms the truth of that old saying about revenge. It is a dish best served cold.
இக்கதையைத் தமிழாக்கம் செய்த விஸ்வநாத் சங்கர் சொல்வனம் வாசகருக்கு முன்பே அறிமுகமானவர். இந்தத் தளத்தில் தேடினால் அவரது இதர எழுத்துகள் கிட்டும்.