Listen

Description

ஆங்கில மூலம்  லியோ டால்ஸ்டாயின் "My Dream"

"என் கனவு"  தமிழில் மொழிபெயர்த்தவர்  எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா 

To read: / முழுவதும் வாசிக்க  

https://solvanam.com/2021/08/22/என் கனவு/ 

“இனிமேல் அவள் எனக்கு மகள் இல்லை. என்ன, புரிகிறதா இல்லையா? அப்படி ஒரு மகள் எனக்கு இல்லவே இல்லை. ஆனாலும் கூட அந்நியர்களின் தயவில் நான் அவளை அப்படிவிட்டு விடவும் முடியாது. அவள் எப்படி வாழ ஆசைப்படுகிறாளோ அதற்கான வசதிகளை மட்டும் செய்து தந்து விடுகிறேன். ஆனால் அவளைப் பற்றி எது கேட்கவும் எனக்கு விருப்பமில்லை. இப்படிப்பட்ட ஒரு கொடுமையை நினைத்தாவது பார்த்திருக்க முடியுமா…..? என்ன மாதிரி கொடுமை..”

அவர் தன் தோள்களை உயர்த்தியபடி தலையை உலுக்கி விட்டுக் கொண்டார். கண்களை நிமிர்த்திப் பார்த்தார்.

மத்திய ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு மாகாண கவர்னராக இருந்த தன் சகோதரரிடம்

இவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தார் இளவரசர் மைக்கேல் இவானோவிச். அவருக்குப் பத்து வயது இளையவரான இளவரசர் பீட்டருக்கு ஐம்பது வயதிருக்கலாம்.