Other People | Neil Gaimon | பிற மனிதர்கள் | மைத்ரேயன் |
Description
மூலம்: “Other People” by Neil Gaimon, 2001, October/November issue of ‘The Magazine of Fantasy & Science Fiction.’
நீல் கே(ய்)மன் இங்கிலீஷில் இன்று எழுதும் எழுத்தாளர்களில் மிகப் பிரபலமானவர்களில் ஒருவர். ‘மண்மனிதன்’ (Sandman) என்று இவர் எழுதிய ஒரு சித்திர நாவல் வரிசைகளிலிருந்து, திரைக் கதைகள், சிறுவர் நாவல்கள், அதிகற்பனை நாவல்கள் என்று பல வகைப் புனைவுகள். பல வயதினரையும் இலக்காக வைத்து எழுதிய பல வகைப் புனைவுகளும் பிரபலமானதால் மேற்கின் இலக்கிய உலகில் அபூர்வமான திறமை உள்ளவர் என்று அறியப்படுகிறார். இவரைப் போன்ற பல வகைப் புனைகதைகளை எழுதி வெற்றியும், அங்கீகாரமும் பெற்றவர்கள் வெகு சிலரே. ரே பிராட்பரி, எச்.ஜி.வெல்ஸ், எட்கர் ஆலன் போ போன்ற சில ஆசிரியர்கள் நினைவுக்கு வருவர். அவர்களை ஒத்த ஆகிருதி உள்ளவர் இவர் என்பது திண்ணம்.
இந்தக் கதையில் வரும் ’லாஸரீனின் பெண்’ என்ற சித்திரவதைக் கருவி என்ன வகை என்ற விவாதம் வலையில் இன்னமும் நடக்கிறது. ஒரு பதில்- சோரம் போன கணவனுக்குக் கிட்ட வேண்டிய தண்டனையை அக்கருவி நிறைவேற்றும். அக்கருவியை மிக நெருக்கமாக அனுபவித்தான் என்று கெய்மன் எழுதியதன் உள்ளடக்கம் அதுதான் என்று வாசகர் ஒருவர் வாதிடுகிறார். கெய்மனிடம் இருந்து ஏதும் விளக்கமில்லை. ஆனால் விவிலியக் கதையான லாஸரஸுடன் ஒரு விதத்தில் தொடர்புள்ளது என்பது ஊகிக்கப்படலாம். மறுபடி மறுபடி உயிர்த்தெழும் ஒரு நபரின் வாழ்வை விவிலியம் கருணையின் குறியீடாக்குகிறது, இங்கோ அதே தலைகீழாக்கப் பட்டு, பெரும் துன்பத்துக்குப் பாதையாகக் காட்டப் படுகிறது என்று ஊகிக்கலாம்.
சொல்வனம் | இதழ் 21 | மார்ச் 19, 2010
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2010/03/19/பிற-மனிதர்கள்/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan