எழுத்தாளர் பானுமதி ந. சிறுகதை
அவன் மயக்கத்திலிருந்தான். காற்றில் நலுங்கும் சுடர் போல் உள்ளே ஏதோ ஆடிக்கொண்டிருந்தது. மயக்கத்திலிருப்பது தானா அல்லது மெல்லிய இழையாகப் பிரியும் உணர்வா? உணர்வுகளில் இத்தனை வகைமை ஒரே நேரத்தில் ஏற்படுமா? ஒன்றை விஞ்சி ஒன்று மேலெழுகையில் அவன் ஏதோ ஒன்று வெடித்துச் சிதறுவதைப் பார்த்தான். அதன் உச்சமான வலியில் அவன் அலறினான்; உடனே சிரித்தான். அவனை யாரோ படுக்கையில் எழுப்பி உட்கார வைத்தார்கள்.
அந்த இடம் மருத்துவ வளாகத்தின் கம்ப்யுடேஷனல் ந்யூரோ சைன்ஸ் அன்ட் ந்யூரோ இன்ஃபார்மேடிக்ஸ் துறை.