Solvanam.com புனைவு வனம்: சோழன் எழுதிய ’தருணங்கள்’ சிறுகதை குறித்த எழுத்தாளர் சந்திப்பு
சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2024/12/22/தருணங்கள்/
சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம்
'தருணங்கள்'- சிறுகதை குறித்த உரையாடல்
எழுத்தாளர்: சோழன்
உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன்
எழுத்தாளர் சோழன்- சிறு முன்னுரை
சோழன்
சொந்த ஊர் தஞ்சாவூர். இயற்பெயர் ராஜ ராஜ சோழன். இவர் தஞ்சாவூரில் பள்ளியில் கணிப்பொறி அறிவியல் துறையில் பணிபுரிந்து வருகிறார். பூபாளம், நடுகல், சொல்வனம், மயிர் மற்றும் காற்றுவெளி இணைய இதழ்களில் கவிதைகள் வெளிவந்துள்ளன. சொல்வனம், மயிர் மற்றும் சிறுகதைகள்.காம் இணைய இதழ்களில் சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
இவரது தருணங்கள் கதை நம் தினசரி வாழ்வில் கவனிக்காமல் போவதை கவனமாக ரசிக்க வைக்கும். நம்மை சுற்றி நிகழும் இயற்கையும் மனித உறவுகளும் எவ்வளவு சுகமானவையென உணர வைக்கும் மென்மையான மற்றும் உள்ளுணர்வோடு கூடிய கதை இது. இய்ற்கையின் சத்தங்கள் அனைத்தும் பாடலாக அதன் மூலம் இன்னிசையாக உணரப்படுகிறது!