Average: Ramprasad - Tamil Short Stories
To read: / முழுவதும் வாசிக்க: https://solvanam.com/2020/11/08/%e0%ae%86%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87%e0%ae%9c%e0%af%8d/
ஒலி வடிவம், காணொளி: ஜமீலா ஜி. / Voice, Video: Jameela G.
-------
இந்தியப்பரப்பில் இயங்கும் ஒரு விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் நான் ஒரு ட்ரெய்னி (trainee).
இன்னும் சொல்லப்போனால், அரியர் இல்லாமல் படித்திருந்தால் ஒரு வேளை நிரந்தர உத்தியோகம் கிடைத்திருக்கலாம்.
இரண்டொரு பாடங்களில் அரியர் இருக்கப்போய் நிறுவனத்தார்களுக்கு என் மீது நம்பிக்கை வராமல் என்னைத் தற்காலிகமாக வேலைக்கு எடுத்திருக்கிறார்கள். தற்காலிகம் என்றால் சுமார் மூன்று மாதங்கள். இந்தக் கால அவகாசமும் கூட இன்றே முடிந்திருக்க வேண்டும். பணியில் சேர்ந்த முதல் நாள், பின் மாலையில் தான் சேர முடிந்தது. காரணமும் நான் வைத்திருந்த அரியர்கள் தான். அதற்குக் காரணம் என் ஆவரேஜ் அறிவுதான்.
அரியர் தேர்வை அரசாங்கம் தள்ளி வைக்க, தேர்வு முடிவு வரும் வரை நான் காத்திருக்க, நிறுவனத்தில் அவசரப்படுத்த, நிறுவனம் குறிப்பிட்ட நாளும் என் தேர்வு முடிவு வெளியாகும் நாளும் ஒருங்கே துரதிருஷ்டவசமாய் சங்கமித்ததில் அன்று மாலை தான் நிறுவனத்தில் சேர முடிந்தது.