கு.ப.ரா என அழைக்கப்படும் கும்பகோணம் ப.ராஜகோபாலன் தமிழ் படைப்பாளிகளில் முக்கியமானவர். பெண் மனதை அப்பட்டமாக சித்தரித்த எழுத்தாளர்.பெண்களின் அக உலகை வெகு நுட்பமாகவும் அநாயசமாகவும் படம் பிடிப்பதில் நிகரற்றவர். கு.ப.ராவுக்கு கதாபாத்திரங்களின் மன ஓட்டம்தான் கதை ஓட்டமே. “சொல்லாமலே சொல்லிவிட வேண்டும்” என்பதுதான் கு.ப.ராவின் கதை மொழி...இதோ அவரின் சிறந்த கதைகளில் ஒன்றான ‘கனகாம்பரம்’....