தி.ஜானகிராமன் அவர்களின் சிறுகதை செவ்வியல் தன்மை கொண்டது. அவர் நாவலாசிரியராக அறியப்பட்டாலும் அவருக்கு சாகித்ய அகாடமி விருது அவரது ‘சக்தி வைத்தியம்’ சிறுகதை தொகுப்புக்குதான்...நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். எப்போதும் அவரது கதைகள் மிக நுட்பமாக மனித உணர்வுகளை பேசுகின்றன...
ஒரு நிகழ்வு அல்லது வாழ்வியல் உண்மைகளை கொண்டு நறுக்குத் தெரித்த மாதிரியான விவரிப்பில் ஒரு உச்சத்தை தொடுவது தி ஜா வின் வழி. வாழ்க்கையின் ஓட்டத்தில் விதவிதமான மனிதர்கள்,அவர்களின் குணங்கள்,உணர்ச்சிஉந்துதலில் எவ்வாறு நடக்கிறார்கள் என கையாளும் கருப்பொருளை தக்க உணர்வுகளுடன் சித்தரித்து அதன் நுட்பத்தை சிறுகதைகளில் அதிகம் சொல்பவர்...