Listen

Description

                எழுத்தாளர் திரு.அ.முத்துலிங்கம் அவர்கள் இலங்கை யாழ்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் அப்பாத்துரை, ராசம்மா தம்பதியரின் ஐந்தாவது மகனாக பிறந்தவர். இலங்கையிலும் இங்கிலாந்திலும் படித்து பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளில் வசித்தவர்.இவர் உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் கனடாவில் வசித்து வருகிறார். கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கிய தோட்ட அமைப்பிற்கு வித்திட்டவர். ஹார்வார்டில் தமிழ் இருக்கை அமைய முக்கிய பங்காற்றியவர்.டொரண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக அயராது  உழைத்தவர்.இலங்கை சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர் 2022ன்  கி.ரா விருதுக்கு சொந்தக்காரர்.                

   நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று எழுத்தாளர் திரு.அ.முத்துலிங்கம் அவர்களின் படைப்புகளைச் சொல்லலாம்.வார்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக ஆட்கொள்வதாக சொல்லும் இவரின் எழுத்து நம்மையும் அதே பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.