Listen

Description

மா. அரங்கநாதன் கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் (திருவண்பரிசாரம்) கிராமத்தில் பிறந்தவராவார், பின்னர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவர் சங்க இலக்கியம், சைவ சித்தாந்தம், மேலைநாட்டு இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இவர் முன்றில் என்ற இலக்கியச் சிற்றிதழை நடத்திவந்தார், 1988 முதல் 1996 வரை 19 இதழ்களாக வெளிவந்த இந்த இதழ் சிற்றிதழ் வரலாற்றில் சிறந்த இடத்தை பெற்றது. இவரது படைப்புகள் பல, பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவரது 86 சிறுகதைளை சாந்தி சிவராமன் என்பவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். சென்னை மாநகராட்சியில் எழுத்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 50 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் வசித்து வந்தவர், அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்று, பின்னர் புதுச்சேரியில் வசித்துவந்தார்.