தேசிய நூலக வாரியத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் நடத்திய தந்தை பெரியார் 146வது பிறந்தநாள் விழா 17-09-2024 அன்று சிறப்பாக நடந்தேறியது. விழாவில் திரு அருண் மகிழ்நன் மற்றும் நளினா கோபால் தொகுத்துள்ள "ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர் தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்" என்ற நூலை தேசிய பல்கலைக்கழக மாணவி அருணா கந்தசாமி ஆய்வு செய்து பேசினார். அவரை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் சித்ரா சங்கரன் மற்றும் தொகுப்பாசிரியர் அருண் மகிழ்நன் உரையாற்றினார்கள். இறுதியாக பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.