சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் 1 முனைவர் மு. வளர்மதி
1. ருதுவான பெண்கள் கைதிகளும் கேடா?
2. பெண் மக்களடிமையும், ஆண் மக்கள் கொடுமையும்
3. மாதர் விடுதலை
4. மாதரும், சுயமரியாதையும்
சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் 20 பேர் சுயமரியாதை மாநாடுகளில் ஆற்றிய உரைகள் - கட்டுரைகளை குடிஅரசு, புதுவை முரசு, புரட்சி ஏடுகளிலிருந்து தொகுத்து முனைவர் வளர்மதி, சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் எனும் தலைப்பில் நூலாக தொகுத்துள்ளார்.
நூலின் இரண்டாம் பதிப்பை கருப்புப் பிரதிகள் வெளியிட்டுள்ளது. குஞ்சிதம் குருசாமி, நீலாவதி இராமசுப்பிரமணியம், சிவகாசி சிதம்பரனார், அன்னபூரணி அம்மாள், ஆண்டாள் அம்மாள், கே.ஏ. ஜானகி, நானாவதி, இந்திராணி பாலசுப்பிரமணியம் ஆகியோரின் புரட்சிகரமான பேச்சும், எழுத்துகளும் இடம் பெற்றுள்ள இந்நூலுக்கு, முனைவர் மு. வளர்மதி எழுதியுள்ள விரிவான முன்னுரை, சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் பற்றிய ஏராளமான தகவல்களைத் தெரிவிக்கிறது.
1930, 31, 32 ஆம் ஆண்டுகளில், அதாவது சுயமரியாதை இயக்கம் தொடங்கிய முதல் 10 ஆண்டுகளில் - அந்த இயக்கம் உருவாக்கிய தாக்கத்தை இதில் காண முடிகிறது.
#கட்டுரைகள்_by_குஞ்சிதம்_நீலாவதி_சிவகாமி_மனோகரம் #முச்சந்துமன்றம்