பாமக என்னும் கட்சி தன் கொள்கைகளில் இருந்து நெடுந்தூரம் விலகி இன்று சாதிக்கட்சி என்னும் குறுகிய வட்டத்தில் உலவுகிறது. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்னும் கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆடி வன்னியர் ஓட்டுக்களை பெற்றுவிடும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில் சேர்த்து 20% இட ஒதுக்கீடு அளித்த கலைஞரை வசைபாடி, வன்னியர் மக்களுக்கு திமுக எதிரி போன்று சித்திரித்து திரியும் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸின் முகமூடிகளை களையும் அண்ணாச்சி.