கலைஞர் நூற்றாண்டு சிறப்பு நிகழ்ச்சி- புத்தகம் பேசலாம்- இனியவை இருபது INIYAVAI IRUBADHU-கலைஞர் மு. கருணாநிதி | MV.Kanimozhi|Viyan
#Spaceshost @PASCAmerica
@ViyanVoice ,@aliyarbilal
கலைஞர் கருணாநிதி இங்கிலாந்து, ரோம், பாரிஸ், மேற்கு ஜெர்மனி முதலாய நாடுகளிற் கண்டு களித்தவற்றை 'இனியவை இருபது' என்னும் பயனக் கட்டுரை தொடராக வந்தது. பின்னர் அவர் விரிவாக எழுதி நூலாக வெளியிடப்பட்டது. ‘‘கலைஞர், புதினங்களைப் படைத்தார்; நாடகங்களைப் படைத்தார்; கட்டுரைகளைப் படைத்தார் என்பது மட்டும் அவரது பங்களிப்பு அன்று. அவர், புதிய தமிழை... புதிய தமிழ் நடையைத் தமிழ் உலகுக்குப் படைத்துத் தந்தவர்’’ என்றார் டாக்டர் வா.செ.குழந்தைசாமி. இங்கிலாந்து, ரோம், பாரிசு, மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு ஒரு முறையும், அமெரிக்க நாட்டுக்கு ஒரு முறையும் பயணம் மேற்கொண்டேன். இதில் நான் குறிப்பிட்டுள்ள நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பில்லாதவர்கள், இதனைப் படித்துவிட்டு அங்கெல்லாம் சென்று வந்த உணர்வைப் பெற்றாலும், அல்லது எப்படியும் ஒரு முறை அந்த நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற துடிப்பினை வெளியிட்டாலும், அது இந்த நூலுக்குக் கிடைத்த வெற்றியாகும். அன்பன்,மு.கருணாநிதி