உலக பொறியாளர்களே! ஒன்று கூடுங்கள்.
என்னிடம் அதிகம் கேட்கப்பட்டக் கேள்வி : உங்கள் பொறியாளர் அணி என்ன செய்யும்?
எங்களை வளர்த்தெடுத்த தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நினைவாக திமுக பொறியாளர் அணி தனது முதல் செயல் திட்டத்தை (Action Plan) வெளியிடுவதில் பெருமை கொள்கிறது.
My Roots : எனது வேர்கள்.
Just 30 வருடங்களுக்கு முன்னர் வரை பல கோடி குடும்பங்களின் கனவாக இருந்த பொறியியல் படிப்பை வீட்டுக்கு ஒரு பொறியாளர் இருக்கும்படி தமிழ்நாட்டில் சாத்தியப்படுத்தியது நமது திராவிட அரசுகள்.
அதையும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கிட்டும்படி செய்தது தலைவர் கலைஞர்.
அவர் நுழைவுத் தேர்வை நீக்கியதாலும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக்கட்டணத்தைச் செலுத்தியதாலும் பொறியியல் பட்டம் பெற்று உலகம் முழுவதும் பரந்து விரிந்து சாதித்துக் கொண்டிருக்கும் நமது தமிழ் பொறியாளர்களையும்,
அதே கனவுகளுடனும், இலட்சியத்துடனும் தற்போது பள்ளிக் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் பல லட்சம் மாணவர்களையும் ஒரே தளத்தில் இணைக்கும் செயலி ஒன்றினை உருவாக்கி உள்ளோம்.
ஆன்லைன் சிறப்புப் பயிற்சி, ப்ராஜெக்ட் வழிகாட்டல், நவீன தொழில்நுட்ப அறிமுகம் என பல தளங்களில் அறிவுப்பறிமாற்றம் செய்யக் கூடிய வகையில் இது அமையும்.
மேலதிக விவரங்கள் செயலி வெளியீட்டு விழா அன்று அறிவிக்கப்படும்.
10000 பொறியாளர்களையேனும் தன்னார்வலராகவும், Mentor களாகவும் உருவாக்கிட இலக்கு வைத்துள்ளோம்.
உலகின் எந்த அரசியல் இயக்கமும் இதுவரையில் செய்திடாத புதிய முன்னெடுப்பை திமுக பொறியாளர் அணி தமிழ்நாட்டின் எதிர்கால நலனுக்காக முன்னெடுக்கிறது.
இந்த மண்ணிலிருந்து உரம் பெற்று வளர்ந்து உயர்ந்திட்ட மாபெரும் விருட்சங்களே!
இதே மண்ணின் இளம் குருத்துகளுக்கு நீர் பாய்ச்சிட வாருங்கள் என உங்களை அன்போடு அழைக்கிறோம்.
மாண்புமிகு விளையாட்டு & இளைஞர் நலன் துறை அமைச்சர் @Udhaystalin அவர்கள் வெளியிட இருக்கும் இந்த விழாவிற்கு வரும் ஞாயிறு மாலை 4:00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்துக்கு வாருங்கள்.
வந்து எங்களை வாழ்த்துங்கள்.
-SKP Karuna.
1. My Roots Application is now available at both Play Store and App Store now.
2. Further improvements and additions shall be done after your feedbacks.