Listen

Description

'மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும்' என 'டார்கெட் 200' என்கிற கனவோடு பயணிக்கிறார் மு.க ஸ்டாலின் ஆனால் அந்தக் கனவை சிதைக்கும் வகையில் 7 வேட்டுகள் ஷாக் கொடுக்கிறது. முக்கியமாக கே.என் நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜி என மூன்று அமைச்சர்களை டார்கெட் செய்யும் எடப்பாடி & பாஜக. இதில் உயர்நீதிமன்றத்தின் கண்டனத்தால் பொன்முடியின் அமைச்சர் பதவிக்கு ஆபத்து. இதையொட்டியும் அமைச்சரவை மீட்டிங் நடந்துள்ளது. 'பேச்சில் கவனம் தேவை' என அட்வைஸ் கொடுத்துள்ளார் மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம், சாதி ஆணவ படுகொலைகள், சட்டம் ஒழுங்கு சிக்கல்கள் என மு.க ஸ்டாலினை தூங்கவிடாமல் செய்யும் பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்கின்றன. முக்கியமாக 5 லட்சத்துக்கும் மேலான விசைத்தறி தொழிலாளர்களின் ஒரு மாதத்திற்கு மேலான தொடர் போராட்டம். இது ஸ்டாலினின் கோவை கனவையும் சிதைக்கும் என்கிறார்கள். என்ன செய்யப் போகிறார் முதலமைச்சர்?