ஒருங்கிணைந்த அதிமுக தான் வெற்றியைக் கொடுக்கும் அதற்கான முயற்சியை எடுங்கள் என எடப்பாடிக்கு பத்து நாள் கெடு விதித்துள்ளார் செங்கோட்டையன். உடனடியாக சசிகலா, ஓபிஎஸ் என பலரும் வரவேற்றுள்ளனர். எடப்பாடியை பொறுத்தவரை முதலமைச்சர் பதவியை விட கட்சி பதவியை முக்கியமானதாக பார்க்கிறார். எனவே செங்கோட்டையனின் கெடுவை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. தேவைப்பட்டால் அவரை நீக்கவும் முடிவு எடுக்கலாம் என்கிறார்கள். இன்னொரு பக்கம் எடப்பாடி முக்கியம் ஒருங்கிணைந்த அதிமுகவும் அவசியம் அதுவே பாஜகவுக்கு பலமானதாக மாறும் என பாஜக கருதுகிறது. ஒரு தர்ம சங்கட நிலையில் உள்ளது.
நடக்கும் காட்சிகள் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி உள்ளது திமுக. செங்கோட்டையன் அங்கேயே இருந்து கலக குரல் எழுப்புவது தங்களுக்கு நல்லது என கணக்கிடுகிறது திமுக. செப்டம்பர் 15 என்ன ஆகப்போகிறது? கிளைமாக்ஸ் கட்டத்தில் அதிமுக.