சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு, சமீபத்தில் நாக்பூரில் இருக்கும் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு சென்றார் பிரதமர் மோடி. இத்தனை ஆண்டுக்களாக இல்லாமல் தற்போதைய இந்த திடீர் விசிட் பல்வேறு கேள்விகளையும், பரபரப்பையும் உருவாக்கியுள்ளது. இதற்குப் பின்னணியில் மூன்று நெருக்கடிகள் பேசப்படுகிறது. பாஜகவில் 75 வயதை தொட்டுவிட்டால் பிரதமர் பதவியில் இருப்பவர்கள், இளைய தலைமுறைகளுக்கு வழி விட வேண்டும் என்பது எழுதப்படாத விதி.வரும் செப்டம்பர் மாதம் மோடி 75 வயதை அடைகிறார். மற்றொன்று, ஏப்ரல் இறுதிக்குள் பாஜகவின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய வேண்டும். இதற்கடுத்து, ஆர்எஸ்எஸ் ஒத்துழைப்பு தராததால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையை பாஜகவால் பெற முடியவில்லை இதே நிலை நீடித்தால் அடுத்தடுத்து வரும் மாநில தேர்தல்களில் பெரும் பின்னடைவை சந்திக்க வேண்டி இருக்கும் எனவே அனைத்து நெருக்கடிகளையும் சமாளிக்க நாக்பூரில் சரணடைந்துள்ளார் மோடி என்கிறார்கள்.