பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணத்துக்கு தயாராகி இருக்கிறார். 50 தொகுதிகள் டார்கெட் வைத்து 15 தொகுதிகளை கன்ஃபார்ம் பெற வேண்டும் என திட்டமிட்டு இந்த பயணத்தை அமைத்துள்ளார்.
இதன் வெற்றி, கூட்டணி கட்சிகளிடம் அதிக தொகுதிகளை பெற உதவும் என்பது அவர் கணக்கு. மதிமுக - திமுக இடையே சில உரசல்கள் அதிகரித்தபடி இருக்கிறது. இதையொட்டி மதிமுக, பாஜக ரூட் எடுத்தால், அதை ஈடு செய்ய தேமுதிக உள்ளே கொண்டு வரலாம் என கணக்கிடுகிறது திமுக. அதே நேரத்தில் கம்யூனிஸ்டுகள், விசிக தவிர்த்து, மக்கள் நல கூட்டணி குறிப்பாக மதிமுக, பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என கணக்கு போடுகிறார் மோடி.
மதிமுக,தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் வரும்போது திமுக கூட்டணியும் சரியும் அது பிரச்சார பலமாகவும் மாறும் என்பது மோடியின் கணக்கு. எடப்பாடிக்கு இந்த விஷயத்தை அசைன் செய்துள்ளார். இன்னொரு பக்கம் 30% டார்கெட்டோடு தீவிரமாக களமாட தொடங்கி இருக்கும் விஜய். மதுரை மாநாடு, செப்டம்பர் 17 இல் இருந்து பெரியார் பிறந்த நாளிலிருந்து சுற்றுப்பயணம் என புது ரூட் எடுக்க உள்ளனர். இன்னொரு பக்கம் எடப்பாடி பயணத்தை ஒட்டி மூன்று கேள்விகளை உளவுத்துறை ரிப்போர்ட்டை ஆதாரமாக வைத்து கேட்கிறார் மு.க ஸ்டாலின். இதனால் அலறிப் போயிருக்கும் மந்திரிகள்.