* 'ஜெயிலர்' திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.375.40 கோடியை கடந்துள்ளது.
* மணிப்பூரில் பழங்குடிகள் வசிக்கும் மாவட்டங்களுக்கு தனியாக தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு குகி ஸோ எம்எல்ஏக்கள் 10 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
* நாங்குநேரியில் பள்ளி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் துறைரீதியான முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை இயக்குநரிடம் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்ராசு அறிக்கையை தாக்கல் செய்தார். பள்ளியில் மாணவருக்கு நேரிட்ட சாதிய கொடுமைகள் குறித்து விரிவான தகவல்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது சகோதரியை விடுதியுடன் கூடிய வேறு பள்ளியில் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
* எனது பிறந்தநாளுக்காக, நீங்கள் சிரமப்பட்டு, பயணித்து எனது இல்லம் வருவதை தவிர்த்துவிட்டு, தாங்கள் இருக்கும் பகுதியிலேயே உங்கள் அருகில் இருக்கும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு, உங்களால் இயன்ற அளவில் நீங்கள் செய்கின்ற உதவிகளே, நீங்கள் எனக்கு அளிக்கின்ற, சிறந்த பிறந்தநாள் பரிசாக, மனதார ஏற்றுக்கொள்கிறேன். - சசிகலா
* சசிகலாவால் தனது உயிருக்கும் தன் கணவரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும், இது தொடர்பாக புகார் அளித்திருப்பதாகவும் ஜெ.தீபா தெரிவித்தார்.
* தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் மகள் துவாரகா உயிருடன் இருப்பதாக மதிவதனியின் சகோதரி வீடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* சமுதாயத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக ஏராளமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சில வார்த்தைகள் கோர்ட் நடைமுறையில் கூட பயன்பாட்டில் உள்ளது. அது போன்ற வார்த்தைகளுக்கு சுப்ரீம் கோர்ட் கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.அதன்படி, 40 வார்த்தைகளுக்கு பதில், புதிய வார்த்தைகள் அடங்கிய கையேடு புத்தகத்தை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் வெளியிட்டுள்ளார்.
-Solratha Sollitom