தன்னைப் பற்றி தானே விளக்கம் தரக் கூடிய ஓர் உறுப்பாக இருப்பதால் மூளை இந்த கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. இதைத் தவிர வேறு பல தனித்துவமான அம்சங்களும் மூளைக்கு உள்ளன.
நாம் மூச்சு விடுவதில் இருந்து இந்தக் கட்டுரையைப் படிப்பது வரையில், தத்துவார்த்தமான கேள்விகளைக் கேட்பது வரையில் எல்லாவற்றுக்குமே மூளை தான் காரணமாக உள்ளது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம்.
இந்தப் பிரபஞ்சத்தில் மிகவும் புரியாத, புதிரான விஷயமாக மூளை இருக்கிறது. பால்வெளியில் உள்ள நட்சத்திரங்களைவிட அதிகமான எண்ணிக்கையில் மூளையி