Listen

Description

Listen to this audiobook in full for free on
https://epod.space

Title: Thiruvaymozhi
Author: Nammazhvar
Narrator: Ramani
Format: Unabridged
Length: 6:33:53
Language: Tamil
Release date: 03-20-2022
Publisher: Findaway Voices
Genres: Fiction & Literature, Essays & Anthologies

Summary:
திருவாய்மொழி தமிழ் வேதம் எனப் போற்றப்படும் நூல். நம்மாழ்வார் இதனைப் பாடியுள்ளார். நம்மாழ்வாரின் பாட்டுடைத் தலைவர் திருமால்.
இவர் திருமாலைத் தெய்வமாகக் கொண்டு பாடல்களைப் பாடினாலும் பிற சமயக் கோட்பாடுகளையும் மதித்துப் போற்றியவர்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழி 1102 பாசுரங்களைக் (பாடல்களைக்) கொண்டது. இதில் பல்வேறு வகையான விருத்தப் பாடல்கள் அந்தாதியாக அமைந்துள்ளன. இந்நூலின் பாடல்களில் பல அகத்திணைத் துறைகளாக உள்ளன.
அவாவறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவிலந் தந்தாதிகளால் இவையாயிரமும் முடிந்த
அவாவிலந் தாதி பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே. (10-10-11)
அவா நீங்கும் படி சூந்து வரும் திருமாலை, நான்முகனை, சிவபெருமானைப் போற்றிப் பாடி, அவா நீங்கி வீடு பெற்ற குருகூரின் சடகோபனாகிய நான் சொன்ன அவா நீக்கும் அந்தாதித் தொடையால் அமைந்த இந்த ஆயிரம் பாடல்களை நிறைவு செய்த அவா நீக்கும் அந்தாதியான இந்தப் பத்துப் பாடல்களையும் பாடியவர்கள் வீடு பேறு பெற்று உயர்ந்தார்கள் என்று கூறும் பாடலோடு நூல் நிறைவு பெறுகிறது.
நம்மாழ்வார் பாடல்களை ஒலி நூலாக்கம் செய்திருக்கும் ரமணி தன் முனைவர் பட்டத்துக்காக //நம்மாழ்வார் மற்றும் ஹாப்கின்ஸ் ஆகியோர் பாடல்களில் சமய அனுபவம்// (Religious Experience in the Poetry of Nammalvar and Hopkins) என்றோர் ஆராய்ச்சி நூல் எழுதியிருக்கிறார். சென்னைப் பல்கலைக் கழகம் இதற்கான முனைவர் பட்டம் தந்திருக்கிறது.