இந்த பகுதியில் இடம் பெறுவது திருக்குறளின் 22வது அதிகாரமான ஒப்புரவறிதல். ஒப்பு என்ற சொல்லுக்கு சமம், இணை என்று பொருள் சொல்லலாம். வாழும் சமுதாயத்தோடு இணைந்து பிறர்க்கு இயன்ற அளவு உதவி செய்து, தன்னிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழ்வதே ஒப்புரவறிதல் ஆகும். தன்னலம் இல்லாமல் பொதுநலன் கருதி எதையும் எதிர்பார்க்காமல் செய்வதைப் பற்றி இந்த அதிகாரம் விளக்குகிறது. ஒப்புரவு செய்யும் போது கேடுகள் வந்தாலும் ஒப்புரவை நிறுத்தாமல் செய்யவேண்டும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.