இன்றைய பகுதியில் திருக்குறளின் 25வது அதிகாரமான அருளுடைமையிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்க்கப்போகிறோம். திருக்குறளின் அறத்துப்பாலில் துறவியல் அறங்களைக் கூறும் பகுதியில் அருளுடைமை அதிகாரம் இடம் பெறுகிறது. அருள் என்றால் பிற உயிர்களிடம் கருணையோடும் இரக்கத்தோடும் நடந்து கொள்வது. நம்மைவிட மெலிந்தவர்களிடம் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும். அருள் குணம் உடையவர்கள் பிறரைத் துன்புறுத்த மாட்டார்கள். பிறர் துயர் தீர உதவுவார்கள்.
கேட்டு மகிழுங்கள்!