இந்தப் பகுதியில் நாம் பாரக்கப்போவது திருக்குறளின் 45வது அதிகாரமான பெரியாரைத் துணைக்கோடல். வயதில் பெரியவர்களுக்கு வாழ்க்கையில் அனுபவம் அதிகமாக இருக்கும். அவர்கள் அறிவிலும், சிந்தித்து செயல்படுவதிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். தவறுகள் நிகழாவண்ணம் செயல்படுவார்கள். இந்த அதிகாரம் பெரியவர்களின் துணையை நாடுவதால் வரும் பயனையும், அப்படி துணையை நாடாமல் இருப்பதால் வரும் குற்றத்தையும் எடுத்துக் கூறுகிறது.