திருக்குறளின் குற்றங்கடிதல் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பாரத்தோம். குற்றங்கடிதல் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் பாரக்கப்போகிறோம்
குற்றங்கடிதல் என்றால் நம்மிடம் உள்ள குறைகளை அறிந்து அவைகளை நீக்கிக் கொள்வதாகும். இந்த அதிகாரம் ஒரு தலைவனிடம் உள்ள கோபம், பொறாமை, கர்வம், பிறரக்கு கொடுத்து உதவாமல் பொருள் சேர்ப்பது இப்படி உள்ள தீய குணங்களை நீக்கச் சொல்கிறது. இது தலைவனுக்கு மட்டுமில்லாமல் எல்லோருக்கும் பொருந்தும்.