நம்முடைய சிந்தனை, நம்பிக்கை மற்றும் நடவடிக்கை போன்றவற்றை மேம்படுத்திக்கொள்வதன் மூலம் நாம் நம் வாழ்க்கையை மிகவும் சிறப்பானதாக அமைத்துக்கொள்ள முடியும்.
நம் வாழ்க்கை விலைமதிப்பற்றது. நாம் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்தும் உணராமலும் இந்த வாழ்க்கையை அன்றாடம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் முக்கிய மான கேள்வி ஒன்று இருக்கிறது. நம் வாழ்க்கையை நாம் சாதாரணமாக வாழ நினைக்கிறோமா அல்லது மிகச் சிறப்பான வாழ்க்கையை வாழ நினைக் கிறோமா என்பதுதான் அது.