இந்த வாழ்க்கைமுறை நோய்களுக்கெல்லாம் காரணம், நமது உடலின் 'உயிரியல் கடிகார'மும் (Biological Clock) 'சர்காடியன் இசைவு'ம் (Circadian Rhythm) பாதிக்கப்படுவதுதான் என்கிறது சமீபத்திய ஆய்வு. 2017-ம் ஆண்டு, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜெஃப்ரி ஹால், மைக்கேல் ரோஸ்பாஷ் மற்றும் மைக்கேல் யங் ஆகியோரின் ஆராய்ச்சியும் நமது உடலின் ஒவ்வொரு செல்களிலும் இயங்கும் உயிரியல் கடிகாரம் மற்றும் அதன் சர்காடியன் இசைவைப் பற்றியதுதான்.