Listen

Description

தற்காதல், அல்லது நாசீசிசம் (Narcissism, நார்சீசிசம்) என்னும் சொல், தனது சொந்த ஆளுமை மற்றும் உடலில் வெறி கொண்ட ஒரு நபரின் உளவியல் நிலையை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல். நாசீசிச ஆளுமைக் குறைபாடு (Narcissistic personality disorder) என்பது நீண்ட காலமாக மனிதருக்குள் நிகழக்கூடிய ஆளுமைச் சிதைவு ஆகும். இந்தக் குறைபாடு உள்ளவர்கள் தங்களின் சுய உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்களாகவும், அதிகமாக பாராட்டுகளை விரும்புபவர்களாகவும், மற்றவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யாமலும் இருப்பார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றியோ, வெற்றியை அடைவது பற்றியோ, அவர்களின் தோற்றத்தைப் பற்றியோ சிந்திப்பதில் நிறைய நேரம் செலவிடுவார்கள். அவர்கள் பெரும்பாலும் அவர்களைச் சுற்றியுள்ள மக்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவார்கள். இந்த நடத்தை பொதுவாக ஒருவரின் இளமைக்காலத்தில் ஆரம்பித்து பல்வேறு சமூக சூழ்நிலைகளின் காரணமாக வெளிப்படுகிறது.

See less