மனம் பல்வேறு எண்ணங்களாலும், நினைவுகளாலும் நிறைந்தது.
அது ஓய்வாக இருக்கும்போதுகூட எதையாவது சிந்தித்துக்கொண்டிருக்கும்.
நம்மையும் அறியாமல் மனதின் உள்ளே ஓர் உரையாடல் நடந்துகொண்டே இருக்கும்.
உங்களோடு நீங்களே பேசிக்கொள்வது ( Self Talk ) மன நோயல்ல... ஆரோக்கியமான மனநிலை... அதிக அறிவாற்றல் கொண்ட செயல்பாடு' என்கிறது சமீபத்திய ஆய்வு.