Listen

Description

எது அழகு? எதெல்லாம் அழகின்மையோ அவற்றைத் தவிர மற்றெதுவும் அழகுதான். எவையெல்லாம் அழகின்மைகள்? அவற்றை ஊடகங்களும், சினிமா உலகமும், அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனங்களும் வடிவமைத்து கற்றுத் தருகின்றன.அழகு என்பது பார்ப்பவர் கண்களில் உள்ளது என்பது எவ்வளவு உண்மையோ அதே போல் நம் மனதிலும் உள்ளது. நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாக தோன்றுவதின் முதல் படி.ஒரு மனிதனின் அழகு அவனுடைய தோற்றத்தில் இல்லை. அவனுடைய நடத்தைதான் அவனுடைய அழகின் வெளிப்புலமாக இருக்கிறது. தோற்றத்திற்கும், நடத்தைக்குமான முரண்பாட்டில் நாம் ஒருவரின் அழகை வைத்தா மதிப்பிடுகிறோம்? ஆம். அழகு என்பது நிலைக்கண்ணாடியில் பிரதிபலிப்பதல்ல. மற்றவர்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்ளும் மனிதர்கள்தான் இதுவரை மனித சமூகம் கண்ட பேரழகு மனிதர்கள். நீங்கள் அழகுள்ளவரா என்பதை அறிந்து கொள்ள உங்கள் உருவத்தை சமூகக் கண்ணாடியில் பார்ப்பதற்கு முயலுங்கள். நம் அழகைத் தெரிந்து கொள்வதற்கு இதுதான் சிறந்த வழி !

See less