Please visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/832060 to listen full audiobooks.
Title: [Tamil] - Marmayogi Nostradamus
Author: Karthik Sreenivas
Narrator: M Arunachalam
Format: Unabridged Audiobook
Length: 4 hours 35 minutes
Release date: September 7, 2020
Genres: World
Publisher's Summary:
சிந்திக்கத் தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர். புறத்தோற்றங்கள், குணாதிசயங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு மனிதன் சக மனிதனிடமிருந்து வேறுபடுகிறான். தன் சிந்தனையின் தீர்க்கம், தன் சந்ததியினரின் மேல் அவை ஏற்பபடுத்திய தாக்கம் போன்ற காரணிகளால் மனிதன் காலத்தை வென்ற ஞானியாக, கடவுளாக வாழ்கிறான். மனிதன் என்பது பொதுப்படையான பெயராக இருந்தாலும், நாஸ்ட்ராடாமஸ் அதிலிருந்து விலகி அசாதாரண மனிதனாக இருக்கிறார். நாஸ்டிரடாமசிற்கும் நமக்கும் ஒரு சிறிய வித்தியாசம்தான்.வருங்காலத்தில் சரித்திரம் நம்மைப் பற்றி எப்படி பேச வேண்டும் என்பதை பாவித்து கணக்குப் பார்த்து இன்றைய வேலைகளை செய்கிறோம். அனால் நாஸ்டிரடாமஸோ சரித்திரத்தின் வருங்காலத்தையே சதா சிந்தித்தார். முதலில் வந்தது முட்டையா? இல்லை கோழியா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் வைத்தால் இன்றைய தேதியில்கூட பரபரப்பாகஇருக்கும்.அப்படியிருக்க நாஸ்டிரடாமஸின் தீர்க்கதரிசனத்திற்கு என்ன காரணம் என்ற விவாதத்தில் ஆரம்பித்ததே இந்தப் புத்தகம்.இனி நீங்கள் அ, ஆ விலிருந்து தொடங்க வேண்டாம். நாங்கள் விட்ட இடத்திலிருந்து உங்கள் அறிவுத்தேடலைத் தொடர்ந்தாலே போதும். 'உலகமே ஒரு நாடக மேடை நாமெல்லாம் அதில் நடிகர்கள் ' என்ற ஷேக்ஸ்பியரின் கூற்று எவ்வளவு அடர்த்தியான கருத்தை உள்ளடக்கிய வாக்கியம் என்பதை நாஸ்டிரடாமசின் பார்வையில் இப்புத்தகத்தின் மூலம் உணர்வீர்கள். ஒரு மனிதனின் ஆயுட்காலத்தின் கற்பனை என்பது ஒப்பனை அளவில் மட்டுமே. அடுத்து அரங்கேறுவது என்னவோ அதே நாடகம்தான்.