Please visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/593360 to listen full audiobooks.
Title: [Tamil] - RSS -Varalaarum Arasiyalum
Author: Pa Raghavan
Narrator: Kalyanaraman G
Format: Unabridged Audiobook
Length: 4 hours 24 minutes
Release date: May 26, 2022
Genres: Current Affairs, Law, & Politics
Publisher's Summary:
'தேசமெங்கும் எத்தனையோ பல மதக்கலவரங்களின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பெயர் தொடர்ந்து அடிபட்டு வந்திருக்கிறது. அப்பழுக்கற்ற தேசியவாத இயக்கம் என்று அதன் ஆதரவாளர்களும், சந்தேகமில்லாமல் மதவாத இயக்கம் என்று எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார்கள். எது உண்மை? சுதந்தர இந்தியாவின் மிகப்பெரிய கலவர காண்டத்தை பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின் மூலம் தொடங்கிவைத்தது ஆர்.எஸ்.எஸ். மும்பை தொடங்கி கோத்ரா வரை நீண்ட அவலங்களின் சரித்திரம் அழியக்கூடியதல்ல. இயற்கைப் பேரழிவுச் சம்பவங்களானாலும் சரி. பங்களாதேஷ் யுத்தம், கார்கில் யுத்தம் போன்ற தருணங்களானாலும் சரி. நிவாரணப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள்தாம் முதலில் களத்தில் நின்றிருக்கிறார்கள். எனில், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு இரண்டு முகமா? இல்லை. இருபது முகங்கள் என்று எடுத்துக்காட்டுகிறது இந்நூல். வெளியான காலம் முதல் இன்றுவரை இந்துத்துவ ஆதரவாளர்கள் - எதிர்ப்பாளர்கள் என இரு தரப்பினராலும் கடுமையாக விமரிசிக்கப்பட்டு, தூற்றப்பட்டு வரும் ஒரே தமிழ்ப் பிரதி இதுதான். இதுவே இந்நூலின் நடுநிலைமைக்குச் சான்று.'