podcast
details
.com
Print
Share
Look for any podcast host, guest or anyone
Search
Showing episodes and shows of
Barathi Thambi
Shows
Barathi Thambi
புலிகளை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் செய்யப்படும் அரசியல்
புலிகளை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் செய்யப்படும் அரசியல் - நீண்ட நெடிய கடந்த காலத்தைக் கொண்ட இப்பிரச்னையின் தற்காலப் போக்குகள் குறித்தும், இதன் ஊடாக வரலாறு குறித்தும் பேசப்பட்ட ட்விட்டர் ஸ்பேஸ் கூட்டத்தின் ஆடியோ வடிவம் இது. கலந்துகொண்ட விருந்தினர்கள், தோழர் சபா.நாவலன் மற்றும் தோழர் மருதையன் ஆகியோர். கேளுங்கள், பகிருங்கள்.
2021-12-25
1h 53
Chennai Queer LitFest (QLF)
#QLF2021 [Bonus] Vaasippu Medai by Living Smile Vidya
The fourth annual Chennai Queer LitFest 2021 Live was held on Twitter #TamilSpaces #QueerTamilSpaces from 18th to 24th September 2021. The overall theme for #QLF2021 year was “ஓங்கி ஒலிக்கும் குரல்கள்”. This year Vaasippu media Sessions were held before the main festival.Short Story by Latchumanaperumal - Umanggadai from Mella Vilakum Panithirai anthology (https://www.paalputhumai.com/your-guide-to-tamil-queer-literature-part-2/). Read by Living Smile Vidya.Theatre artist and poet Living Smile Vidya curated seven short stories in the book “Mella Vilakum Panithirai”, in an effort to introduce Tamil literature works to the readers that show trans lives in positive light. The stories were written by writers Ki Rajanarayanan, R Natarasan, Pa...
2021-11-16
29 min
Barathi Thambi
HR&CE கல்லூரியில் இந்துக்களுக்கு மட்டும் வேலை - சரியா? தவறா?
HR&CE தொடங்கியுள்ள கல்லூரி வேலைவாய்ப்புகளுக்கு ‘இந்துக்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்’ என்ற நிபந்தனை விமர்சனம் செய்யப்படுகிறது. ‘அரசியல் சட்டத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது’ என்கிறார் கி.வீரமணி. சீமானும் எதிர்க்கிறார். இது சரியா? இந்து கோயில் வருமானத்தில் நடைபெறப் போகும் கல்லூரியில் இதர மதத்தினரை பணியமர்த்தினால் அது என்னென்ன சிக்கல்களை கொண்டுவரக் கூடும்? இதில் சட்டரீதியாக உள்ள சிக்கல்கள் என்ன? அரசியல் ரீதியில் இதை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? -scroll.in இணையதளத்தில் Legal affairs editor- ஆக பணியாற்றிய பத்திரிகையாளர் ஸ்ருதிசாகர் யாமுனன, மகஇக முன்னால் செயலர் தோழர் மருதையன் ஆகியோர் பங்கேற்ற ட்விட்டர் ஸ்பேஸ் கூட்டத்தின் ஆடியோ இணைப்பு கீழே உள்ளது. வாய்ப்பிருப்போர் கேளுங்கள், பகிருங்கள்!
2021-10-25
1h 41
Barathi Thambi
’’தமிழ் - திராவிடம் - கால்டுவெல்’’ - பொ.வேல்சாமி உரை
தமிழின் தொன்மையை உலகறியச் செய்த கால்டுவெல் மீது பாரதிய ஜனதா தரப்பினரும், பெ.மணியரசன், சீமான் உள்ளிட்ட தமிழ்த் தேசிய தரப்பினரும் தொடர்ந்து வன்மம் மிகுந்த அவதூறுகளை பரப்பி வருகின்றனர். ’தமிழுக்கு உரிய தொன்மையை திராவிடத்தின் பெயரில் ஏற்றி வைத்து தமிழை பின்னுக்குத் தள்ளிவிட்டார்’ என்ற இவர்களின் விமர்சனத்தில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? உரிய ஆதாரங்களுடன் நீண்ட பதிலுரையை முன் வைக்கிறார் புலவர் பொ.வேல்சாமி. ஏராளமான தகவல்கள் அடங்கிய இந்த உரை, கால்டுவெல் குறித்தும் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வரலாறு குறித்தும் பல புதிய திறப்புகளை வழங்கும். ஆர்வமுள்ளோர் கேளுங்கள், பகிருங்கள்!
2021-10-23
2h 04
Barathi Thambi
உ.பி. படுகொலைகள்... பாசிசத்துக்குப் பழகிவிட்டோமா?
வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக வட இந்தியாவில் மாபெரும் உழவர் எழுச்சி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வடக்கு உத்திரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி என்ற இடத்தில் அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது, மிகக் கொடூரமாக காரை விட்டு ஏற்றினார், பாஜக ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜர் மிஸ்ராவின் மகன் ஆஸிஸ் மிஸ்ரா. அவர் பயணித்த கார் உள்பட, வரிசையாக மூன்று கார்கள் விவசாயிகள் மீது மோதின. இதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் எட்டு உயிர்கள் பலியான இந்நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், கார் ஏற்றி கொலை செய்த பாஜக அமைச்சரின் மகனுக்கு ஆதரவாகவே பேசினார்கள் பாரதிய ஜனதாவினர். பிரதமர் மோடி, ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. உ.பி.யை ஆளும் யோகி ஆதித்தியநாத் அரசோ, ‘சாட்சியம் இல்லை’ என்று பச்சையாக மறுத்தது. ஆனால், பிரச்னை பெரிதாகிறது என்றதும் கொல்லப்பட்டோர் குடும்பங்களுக்கு 45 லட்சம் இழப்பீடு அறிவித்தது. நேரடியாக காரை விட்டு ஏற்றி கொலை செய்யும் இந்த படுபாதக செயல் குறித்து, இந்திய பொது சமூகம் மற்றும் அரசியல் கட்சிகளின் சின்னஞ்ச் சிறிய முணுமுணுப்புதான் மிகுந்த கவலைத் தரக் கூடியதாக உள்ளது. ‘இவையெல்லாம் சமூகத்தில் நடைபெறாதவை அல்ல’ என்பது போல், இதை கடந்து செல்லும்போக்கு அச்சத்தை அளிக்கிறது. இந்த நிலைமை குறித்து, ‘பாசிசத்துக்கு பழகிவிட்டோமா?’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ட்விட்டர் ஸ்பேஸ் கூட்டத்தின் ஆடியோ பதிவு நிகழ்ச்சியே இது. இதில் தோழர் மருதையன், தி.முக.வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் வழக்குரைஞர் ராஜீவ்காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினார்கள். கேளுங்கள், பகிருங்கள்!
2021-10-16
1h 19
Barathi Thambi
''மெய்யியலும், பொய்யியலும்'' – புலவர் பொ.வேல்சாமி உரை
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைத்த ’தமிழரா, திராவிடரா?’ என்ற கருத்தரங்கில், ‘தமிழர் வாழ்வில் மெய்யியல்’ என்ற தலைப்பில் பேசினார் ம.செந்தமிழன். அதில், பகுத்தறிவு என்பது தமிழர் மரபுக்கு எதிரானது என்று பேசிய அவர், ’தமிழர்களின் வாழ்வு மெய்யியலோடு தொடர்பு உடையது’ என்றார். தமிழ்நாட்டின் சிறப்பே மதச் சார்பின்மைதான் என்று பேசிவரும் காலத்தில், இவர் தமிழர் வாழ்வே மெய்யியல்தான் என்கிறார். அத்தோடு சங்க இலக்கியத்தில் இருந்து சான்று தருகிறேன் என்ற பெயரில் ஏராளமான பொய்கள்; அவதூறுகள். அவை அனைத்தையும் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தும் விதமாக புலவர் பொ.வேல்சாமி அவர்களுடன் நடத்தப்பட்ட ட்விட்டர் ஸ்பேஸ் உரையாடலின் இணைப்பு இது. செந்தமிழன் உரையின் தொடக்கம் முதல் இறுதி வரை அனைத்துமே பொய்யாக இருக்கிறது என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் திட்டவட்டமாக நிறுவுகிறார் பொ.வேல்சாமி. தமிழ் இலக்கியம் மற்றும் வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த உரை மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும்.
2021-09-26
2h 27
Barathi Thambi
ஆப்கன் மக்கள் யார் பக்கம்? நேரடி கள நிலவரம் என்ன?
தாலிபான்கள் மீது நம்பிக்கை வைக்கலாமா? ’அவர்கள் முன்பு போல் இல்லை; மாறிவிட்டார்கள்’ என்ற கருத்து உண்மையா? ஆப்கன் மக்கள் தாலிபான்களை ஆதரிக்கிறார்களா? – இந்தக் கேள்விகளுக்கு விடைகாணும் விதமாக நடத்தப்பட்ட விவாதத்தின் Podcost link இது.தன் பெயரை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாத, ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு செயற்பாட்டாளர்… Deadman என்ற பெயரோடு வந்து கலந்துகொண்டு, அங்குள்ள தற்போதைய கள நிலவரத்தை விளக்கினார்.அதேபோன்று, ஆப்கன் அருகே உள்ள Tajikistan நாட்டைச் சேர்ந்த Malika Jurakulova என்ற பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளர் கலந்துகொண்டு ஆப்கன் நிலவரத்தையும், எல்லையோரங்களில் நடைபெறுவது என்ன என்பது குறித்தும் விளக்கினார்.தோழர்கள்… மருதையன், நாதன், ராஜ் தேவ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.நீண்ட விவாதம்தான். எனினும், ஆப்கன் நிலவரத்தை அறிந்துகொள்வதில் அக்கறை கொண்டோருக்கு நிச்சயம் பயன் தரும். கேளுங்கள், பகிருங்கள்!
2021-08-31
1h 39
Barathi Thambi
ஆகம விதியும், கே.டி.ராகவனும்?
ஆகம விதியும், கே.டி.ராகவனும்? – பேராசியர் சுந்தரவள்ளி, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விக்ரமன், தோழர் மருதையன், தோழர் நாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட Twitter space உரையாடலின் podcast இணைப்பு இது.
2021-08-26
1h 32
Barathi Thambi
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்... வழக்கு, வரலாறு, வருங்கால சவால்கள்!
கருவறை தீண்டாமையை அகற்ற வேண்டும் என்பது தமிழ்நாட்டின் 50 ஆண்டு கால நெடுங்கனவு. இதற்கு பெரியார் முன்மொழிந்த வழிமுறைகளில் ஒன்று அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவது. முதல்வராக இருந்த கருணாநிதி இதை ஒரு சட்டத்தின் வழியாக செயல்படுத்த முனைந்தபோது, பல்வேறு வழிகளில் தடைகளை ஏற்படுத்தியது பார்ப்பனர் தரப்பு. ஏகப்பட்ட வழக்குகள், மேல் முறையீடுகள். அனைத்தையும் கடந்து தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, முதல் கட்டமாக 28 அர்ச்சகர்களை மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் பணிநியமனம் செய்துள்ளது. இவர்கள் அனைத்து சாதிகளையும் சேர்ந்தவர்கள். உண்மையில் இது சமூக நீதி அரசியலில் ஒரு பாய்ச்சல். சாதி பாகுபாட்டை உடைத்து தகர்க்கும் உள்ளடக்கம் கொண்டது. இந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையின் பல்வேறு கூறுகள் பற்றி விவாதிக்கிறது இந்த உரையாடல். Twitter space-ல் நடைபெற்ற இந்த உரையாடலில் பங்குபெற்றோர்... 01. ஸ்ருதிசாகர் யாமுனன், பத்திரிகையாளர்; 02. தோழர் மருதையன்; 03. வழக்குரைஞர் வாஞ்சிநாதன், PRPC மாநில ஒருங்கிணைப்பாளர்; 04.ரெங்கநாதன், தலைவர், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்.
2021-08-20
1h 43
Barathi Thambi
Israel–Pegasus–Spyware -மோடியால் வேட்டையாடப்படும் பத்திரிகையாளர்கள்!
இஸ்ரேலை சேர்ந்த NSO நிறுவனம் Pegausus என்ற உளவு மென்பொருளை தயாரித்து உலகின் பல நாடுகளுக்கு விற்றுள்ளது. அந்த நாடுகள், இந்த செயலியைப் பயன்படுத்தி, பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரையும் ஒட்டுக் கேட்டுள்ளனர். இந்தியாவில் சித்தார்த் வரதராஜன், ரோகினி சிங் உள்ளிட்ட பல முக்கியமான பத்திரிகையாளர்களும், ராகுல்காந்தி போன்ற அரசியல்வாதிகளும், பிரசாந்த் கிஷோர் போன்ற தேர்வல் வல்லுனர்களும் உள்ளனர். அதிர்ச்சியளிக்க கூடிய இந்த உளவு நடவடிக்கை பற்றிய விவாதம் இது. பத்திரிகையாளர்கள் விஜய்சங்கர் ராமச்சந்திரன், அசீப், சபா நாவலன் மற்றும் Cyber security expert வினோத் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் பலர் பேசினார்கள். முழுமையாக கேளுங்கள். இந்த பிரச்னை குறித்த ஒரு கண்ணோட்டத்தை பெறுவதற்கு இந்த விவாதம் உதவி செய்யும்.
2021-07-20
2h 02
Barathi Thambi
கொங்குநாடு சர்ச்சை - நாம் எதை கவனத்தில் கொள்ள வேண்டும்?
தமிழ்நாட்டின் மேற்கு மண்டல பகுதிகளை தனியாக பிரித்து ‘கொங்கு நாடு’ என்ற பெயரில் யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்ற சர்ச்சை பாஜக தரப்பால் புதிதாக முன்னெடுக்கப்படுகிறது. மாநிலத்தை இரண்டாக்க வேண்டும் என்ற இந்த திட்டம் வெறுமனே தமிழ்நாடு அரசை மிரட்டுப் பார்க்கும் செயலா? அல்லது ஆர்.எஸ்.எஸ்ஸின் நீண்டகால நிகழ்ச்சிநிரலின் அங்கமா? இதை நாம் எந்த வகையில் புரிந்துகொள்ள வேண்டும்? – என்பதை ஒட்டி Twitter space-ல் ஒருங்கிணைக்கப்பட்ட விவாதம் இது. இதில் கலந்துகொண்டோர், ஸ்ருதிசாகர் யாமுனன் (பத்திரிகையாளர்), தோழர் மருதையன், தோழர் நாதன், இரா.முருகவேள் (எழுத்தாளர்), திருப்பதி முத்துகிருஷ்ணன், வில்லவன் ராமதாஸ், பிலால் அலியார் உள்ளிட்ட பலர். கொங்குநாடு சர்ச்சையை ஒரு வரலாற்று கண்ணோட்டத்திலும், நிகழ்கால அரசியல் போக்குடனும் புரிந்துகொள்ள இந்த பதிவு உதவும். முழுமையாக கேளுங்கள்.
2021-07-16
2h 04
Barathi Thambi
Fr. ஸ்டேன் சாமி மரணம் - மோடி அரசின் கொட்டடி படுகொலை!
பீமா கோரேகான் வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்டு, ஓராண்டுக்கும் மேல் UAPA சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு, கடைசியில் 84 வயதில் ஒரு விசாரணை கைதியாக மும்பையில் இறந்து போனார் அருட்தந்தை ஸ்டான் சுவாமி. திருச்சி - பூதலூர் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, ஜார்கண்ட் மாநில ஆதிவாசிகளின் நலன்களுக்காக 50 ஆண்டுகளை செலவிட்ட ஸ்டேன் சாமியின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் சிறுமைப்படுத்தி, அவரை ஒரு பயங்கரவாதியாக சித்தரித்தது இந்த அரசு. அவர் மரணம் அடைந்த, 2021, ஜூலை 5-ம் தேதி Twitter space-ல் நடத்தப்பட்ட கண்டனக் கூட்டத்தின் இணைப்பு இது. இதில் கலந்துகொண்டோர், 01. பாலன், வழக்குரைஞர், பெங்களூரு, 02.வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், PRPC, 03.மருதையன், 04.நாதன், 05. அசீப், பத்திரிகையாளர், 06.விக்ரமன், செய்தித் தொடர்பாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.
2021-07-10
1h 31
Barathi Thambi
PUBG, Free Fire.. ஆன்லைன் விளையாட்டுகள் ஆபத்தா? அறிவுத்திறனா?
PUBG, Free Fire உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளன. இவை உண்மையில் மாணவர்கள், இளைஞர்களுக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன? அல்லது இவற்றினால் பாதிப்பு என்பது மிகைப்படுத்தப்பட்ட கற்பனையா? இந்த நவீன கால விளையாட்டுகள் அறிவுத்திறனை மேம்படுத்துகின்றனவா? என பல்வேறு கோணங்களை முன்வைத்து Twitter space-ல் நடத்தப்பட்ட உரையாடலின் இணைப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டோர், திரு.சுனில்குமார், சைக்காலஜிஸ்ட், திரு. வில்லவன் ராமதாஸ், உளவியல் ஆற்றுப்படுத்துனர், திரு.எஸ்.கே.ராஜ், தற்காப்பு கலை பயிற்றுனர், அதிஷா, பத்திரிகையாளர், செந்தழல் ரவி Gamer. மற்றும் பலர்.
2021-07-10
1h 49
Barathi Thambi
புலிகள் ; திமுக - ‘தியாகி, துரோகி’ பிம்பங்களுக்கு அப்பால்...
புலிகள் ; திமுக - ‘தியாகி, துரோகி’ பிம்பங்களுக்கு அப்பால்... - என்ற தலைப்பில் ட்விட்டர் ஸ்பேஸில் கடந்த 22-06-2021 அன்று ஓர் உரையாடல் நடைபெற்றது. தோழர்கள்... மருதையன், நாதன், சபா நாவலன், வில்லவன் ராமதாஸ், மகிழ்நன் பா.ம. உள்ளிட்டோர் பேசினர். நிகழ்வின் இறுதியில் பார்வையாளர்கள் பலர் பங்கேற்ற உரையாடலும் நடைபெற்றது. கிட்டத்தட்ட இரண்டரை மணி நேர உரையாடல் இது. ஈழத் தமிழர் விவகாரம், புலிகள்-பிரபாரன், இதில் தமிநாட்டின் பாத்திரம் என்ன, தி.மு.க. என்ன செய்தது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் விவாதிக்கப்பட்டன.
2021-07-01
2h 23