Look for any podcast host, guest or anyone
Showing episodes and shows of

CPIM Tamilnadu

Shows

CPIM Tamilnadu2023-04-1909 minCPIM Tamilnadu2022-11-1408 minCPIM Tamilnadu
CPIM Tamilnaduகடன் வலையில் தமிழகத்தை சிக்க வைத்தது யார்?ஜனநாயக நாட்டில் எந்த ஒரு மாநில அரசாங்கமாக  இருந்தாலும் அது மக்களுக்காக செயல்படும் பொழுது வருவாய் பற்றாக்குறை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. மக்கள் நலன் மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்காக கடன் பெறுவதும் தவிர்க்க முடியாதவை. ஆனாலும், இவை அனைத்தும் ஒரு வரம்புக்குள் அடங்க வேண்டும். அது எல்லையை தாண்டக்கூடாது. அப்போதுதான், அந்த மாநில மக்களும் மாநிலமும் வளர்ச்சி பாதைக்கு செல்லும். இதில் சில ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது. மாநிலத்தின் ஒட்டுமொத்தமான வருவாய் வரவை காட்டிலும், அரசின் செலவு அதிகரிக்கும்போது வரு வாய் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த பற்றாக்குறையால், தினசரி தேவைகளுக்கும் பணம் இல்லாமல் தத்தளிக்கும் நிலை உருவாகிறது. #Tamilnadu #Debt 
2022-10-2910 minCPIM Tamilnadu2022-04-2309 minCPIM Tamilnadu2022-04-0104 minCPIM Tamilnadu2022-03-2804 minCPIM Tamilnadu2022-02-2807 minCPIM Tamilnadu2022-02-2802 minCPIM Tamilnadu
CPIM Tamilnaduஆளுநர்கள் நியமனம், பங்களிப்பு: மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள்“ஒன்றிய அரசாங்கத்தால் மாநிலங்களுக்கு ஆளு நர்கள் நியமனம் செய்யப்படும் முறை காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கிறது. இது கூட்டாட்சி ஜனநாயக அரசியலுக்கு உகந்ததல்ல. ஆளுநர் பதவி தொடர்ந்து இருந்திட வேண்டும் எனக் கருதினால், பின் அது சர்க்காரியா ஆணையம் குறிப்பிட்டிருந்த அளவுகோல்களை நிறைவேற்றும் விதத்தில், மாநில முதலமைச்சரால் பரிந்துரைக்கப்படும் மூன்று புகழ்பெற்ற நபர்களிலிருந்து ஒருவர்  குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட வேண்டும்.” இப்போதுள்ள ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் ஆளுநர் நியமனம் தொடர்பாகவோ மற்றும் அவரின் செயல்பாடுகள் தொடர்பாகவோ எவ்விதமான சீர்திருத்தத்திற்கும் சாத்தியம் இல்லை. என்ன செய்ய முடியும் என்றால் எதிர்க்கட்சி மாநில அரசாங்கங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கம் மற்றும் சட்டமன்றங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக விழிப்புடன் இருந்திட வேண்டும். இத்துடன் மாநில சட்டமன்றங்கள், பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் போன்றவற்றில், சட்டத்தில் அளிக்கப் பட்டுள்ள விதிமுறைகளையும் வரம்புகளையும் ஆளுநர் மீறமுடியாத விதத்தில் தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.   #BJP #BJPGovt #BJPKillsDemocracy #BJPBetrayedIndia #BJPDestroyingIndia #Governor 
2022-02-2607 minCPIM Tamilnadu
CPIM Tamilnaduயோகி விளையாட கேரளம் கிடைக்காது! - கொடியேரி பாலகிருஷ்ணன்யோகி காவி உடையும் காவித் துண்டும் அணிவது, சீக்கியர்கள் டர்பன் அணிவது ஆகியவை பகத்கீதை, குருநானக் ஆகிய வேத நூல்களின் கூற்றுப்படி யல்ல. மாறாக இந்திய அரசியலமைப்பு வழங்கும்  சுதந்திரத்தின் அடிப்படையிலாகும். அதுபோல் பிற மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் இதுபோல் உரிமையை நமது அரசியமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. ஒருவர் எந்த ஆடையை அணியவேண்டும் என்ற விசயத்தில் அத்துமீறி செயல்படுவது இந்தியாவைப் பிளவுபடுத்து வதற்கான வெறுப்பை ஏற்படுத்தும் விஷ விதையைத் தூவுவதாகும். யோகி மற்றும் அவர்களின் கூட்டாளி களின் இத்தகைய விளையாட்டுகளுக்கு கேரள மண்ணில் இடம் கிடைக்காது.#Kerala #KeralaLeads #LDFGovt #PinarayiVijayan #LeftAlternative 
2022-02-2611 minCPIM Tamilnadu2022-02-2603 minCPIM Tamilnadu2022-02-2507 minCPIM Tamilnadu
CPIM Tamilnaduஉக்ரைன் போர்: ரஷ்யாவிற்கு சீனா ஆதரவுஅமெரிக்கா தலைமையிலான நேட்டோ, கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்த உலகில் நடத்தாத அட்டூழியம் இல்லை. நீண்ட பல ஆண்டு காலமாக தனக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கொன்றுவிடத் துடிக்கிறது. அதற்கான கொடிய போர் வியூகங்களை வகுக்கிறது. அந்த வியூகத்தில் ஏவலாளியாக, கைப்பாவையாக சிக்கியிருக்கும் நாடுதான் உக்ரைன். ரஷ்யா தங்களுடைய நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உக்ரைனை நேட்டோ வளையத்துக்குள் கொண்டு வர முயற்சிக்கும் அமெரிக்காவின் செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. அது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது, எனவே, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கின்றோம் என சீனா தெரிவித்துள்ளது. #CPIM #RussiaUkraineWar #America #UNO #China #War
2022-02-2505 minCPIM Tamilnadu
CPIM Tamilnaduமதமாற்ற தடுப்பு சட்டமும், பாஜக போடும் வேசமும்இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரத்தை பின்பற்றவும், பரப்பவும் அனைத்து மதத்தினருக்கும்  சம உரிமை உள்ளது. ஆனால் பாஜக அரசு தங்களது குறுகிய அரசியல் லாபங்களுக்காக மதக்கலவரங்களை உருவாக்கும் விதமாக தொடர்ந்து  செயல்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கட்டாய மதமாற்ற தடுப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற விஷமப் பிரசாரத்தை முன்வைத்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் விதமாக பாஜக ஆளும் மாநிலங்களில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்படும் போக்கு நடைபெற்று வருகிறது. மேலும் கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடையே நிலவும் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக மத அடிப்படைவாத கருத்துக்களை பாஜக திணித்து வருகிறது. இதை அவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக மத ஒற்றுமையை பேணிக்காக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது.  #Hijab #Secularism #SFI #ConstitutionalRights #BJPFails
2022-02-2507 minCPIM Tamilnadu2022-02-1805 minCPIM Tamilnadu2022-02-1534 minCPIM Tamilnadu2022-02-1525 minCPIM Tamilnadu
CPIM Tamilnaduஹிஜாப் தடை; முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக்குவதற்கான முயற்சியே...ஹிஜாப் தடை; முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக்குவதற்கான முயற்சியே... கல்வி கற்கவரும் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணியக்கூடாது என்னும் நடவடிக்கைக்குப் பின்னால், முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக்குவதற்கான முயற்சி ஒளிந்திருக்கிறது. இது குடிமக்களில் ஒரு பிரிவினரின் அரசமைப்புச் சட்ட உரிமைகள் சம்பந்தப்பட்ட அடிப்படை அம்சமாகும். பாதிப்புக்கு உள்ளான மாணவிகளில் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு, விசாரணையில் இருந்து வருகிறது. இதன் மீது உயர்நீதிமன்றத்தின் விரிவான அமர்வு தீர்மானித்திட இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள உத்தரவாதங்களின்படி, கர்நாடக அரசாங்கத்தின் பாகுபாடான ஆணை ரத்து செய்யப்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
2022-02-1406 minCPIM Tamilnadu
CPIM Tamilnaduகம்யூனிஸ்ட்டுகளின் வீரம் செறிந்த போராட்டத்தின் ரத்த சாட்சியே சேலம் சிறைத் தியாகிகள்...!!!கம்யூனிஸ்ட்டுகளின் வீரம் செறிந்த போராட்டத்தின் ரத்த சாட்சியே சேலம் சிறைத் தியாகிகள்...!!! 17 தோழர்கள் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானார்கள், 5 தோழர்கள் தடியால் அடித்தே கொலை செய்யப்பட்டனர். 119 தோழர்கள் படுகாயமுற்று இரத்தச் சகதியில் கிடந்தனர். அதில் 63 தோழர்களின் உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்தது. அதில், கை, கால், மண்டை உடைந்தவர்கள் ஏராளம். சேலம் சிறையில் 1950 பிப்ரவரி 11ம் அன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உயிரிழந்த தியாகிகளின் நினைவு தினம் இன்று. கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக நடந்த இந்த கொடூரம் நடந்து இன்றுடன் 72 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், தோழர்கள் இறக்கும்போது எழுப்பிய "இன்குலாப் ஜிந்தாபாத்”, "புரட்சி ஓங்குக! ", "கம்யூனிஸ்ட் பார்ட்டி ஜிந்தாபாத் " போன்ற முழக்கங்கள் இன்றும் சேலம் சிறையைத்தாண்டியும் கேட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. மனிதகுல விடுதலைக்கான போராட்டத்தில் சேலம் சிறைதியாகிகளின் தியாகம் என்றென்றும் அழியாது, நிலைத்து நிற்கும் #CommunistStruggle #CommunistProtest #SalemPrison #InqulabZindabad #TNPolitics
2022-02-1108 minCPIM Tamilnadu
CPIM Tamilnaduகாந்தியைக் கொல்ல ஜனவரி 30 ஏன் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது?சாவர்க்கர் தலைமையில் கோட்சே, நாராயண் ஆப்தே உள்ளிட்டோர் அடங்கிய குழு 1948 ஜனவரி 20 அன்று நடந்த ஒத்திகைக்குப் பிறகு காந்தியைச் சுட்டுக்கொல்ல 1948 ஜனவரி 30 என்ற நாள் குறிக்கப்பட்டது. ஜனவரி 30 என்ற நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது கூடத் தற்செயலானது அல்ல. நன்கு திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் விசேஷமான நாள். ஏனெனில் 1933 ஜனவரி 30 என்ற அந்த நாளில்தான் ஜெர்மனியின் சேன்ஸ்ல ராக ஹிட்லர் என்னும் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் வீசி எறியப்பட்ட மாபாதகன் பதவியேற்றுக் கொண்ட நாள். காந்தி சுட்டு வீழ்த்தப்பட்டு சுமார் 74 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட காந்தியின் உருவப் பொம்மையைச் செய்து, அதில் துப்பாக்கியால் சுட்டு சிவப்பு மையைக் கொட்டி ‘மகாத்மா’ கோட்சேவுக்கு வெற்றி முழக்கமிட்டு ஒரு கும்பல் கொக்கரிக்கிறது எனில் அவர்களுக்கு இன்னும் மிக வலிமையாகவும் ஆழமாகவும் மகாத்மா காந்தியின் சிந்தனைகள் இந்த மண்ணில் வேர் விட்டுள்ளது என்பதையே உணர்த்துகிறது. #MahatmaGandhi #AntiNationalRSS
2022-01-3013 minCPIM Tamilnadu2022-01-2302 minCPIM Tamilnadu
CPIM Tamilnaduமோடி அரசாங்கத்தின் தடுப்பூசி அரசியல்கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி  வருகிறது. எனினும் அந்த நோயின் தீவிரம் குறைந்து வருவதாகவும் தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் எதிர்ப்பாற்றல் அதிகரித்து வருவதால் இந்த நோய் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் துவங்கிவிடும் என பல்வேறு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய வைரஸ் குறித்து அலட்சியம் காட்டக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இப்போதும் கூட 25 விழுக்காடு தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு ஒன்றிய அரசு ஒதுக்குகிறது. தடுப்பூசியை வீணாக்குவதில் தனி யார் மருத்துவமனைகள்தான் முதலிடத்தில் உள்ளன. இருந்தாலும் தடுப்பூசி உற்பத்தியிலும் விநியோகத்திலும் தன்னுடைய தனியார்மய மோகத்தை விட்டுத்தர மோடி அரசு தயாராக இல்லை. #CovidVaccination #Covid19 #OmicronVirus #PeopleSufferedPoor #BJPBetryedPeople #BJPDesrtroyingIndia #Modi4Corporates #ModiFails
2022-01-2202 minCPIM Tamilnadu
CPIM Tamilnaduகஜகஸ்தான் அரசை மண்டியிட வைத்த எரிபொருள் விலை உயர்வுப் போராட்டம்களத்தில் 164 உயிர்களை பலி கொடுத்த போதிலும், உறுதியோடு நின்ற மக்கள் தங்கள் போராட்டத்திலும், கோரிக்கையிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவும், மக்களின் நலன்களுக்கு எதிராகவும் அரசாங்கங்கள் எப்போதெல்லாம் முடிவெடுக்கிறதோ அப்போதெல்லாம் சாமானிய மக்கள் கிளர்ந்து எழுந்து அரசை மண்டியிட வைப்பார்கள் என்பதற்கு தில்லி விவசாயிகள் போராட்டமும், கஜகஸ்தான் மக்களின் எழுச்சியும் சான்றாகவே அமைந்துள்ளன. மக்களின் போராட்டங்களை அடக்கிவிடலாமெனும் முனைப்போடு ஆயுதங்களை முதலாளித்துவ அரசுகள் தூக்குகின்றன. ஆனாலும் களங்களில் உறுதியோடு உயரும் மக்களின் கரங்களே வெற்றியைப் பெறுகின்றன. #Kazakhstan #FuelPrice #PetrolPrice #Diesel #PeopleProtest #CapitalismFails #CorporateFails  
2022-01-2203 minCPIM Tamilnadu2022-01-1105 minCPIM Tamilnadu2021-12-2402 minCPIM Tamilnadu2021-12-1012 minCPIM Tamilnadu2021-12-0311 minCPIM Tamilnadu2021-11-2108 minCPIM Tamilnadu2021-11-1405 minCPIM Tamilnadu2021-11-1404 minCPIM Tamilnadu2021-10-1506 minCPIM Tamilnadu2021-10-0608 minCPIM Tamilnadu2021-09-2114 minCPIM Tamilnadu2021-09-1707 minCPIM Tamilnadu2021-09-0923 minCPIM Tamilnadu2021-09-0107 minCPIM Tamilnadu2021-08-2609 minCPIM Tamilnadu2021-08-2503 minCPIM Tamilnadu2021-08-1323 minCPIM Tamilnadu2021-08-1006 minCPIM Tamilnadu2021-08-0614 minCPIM Tamilnadu2021-08-0611 minCPIM Tamilnadu2021-08-0609 minCPIM Tamilnadu2021-08-0604 minCPIM Tamilnadu2021-08-0107 minCPIM Tamilnadu
CPIM Tamilnaduபழம்பெரும் ஜனநாயக நாடு எனத் தம்பட்டம் அடித்துவிட்டு ஜனநாயகத்தை சீர்குலைக்க ஒட்டுக் கேட்பதா? | #Pegasus"சர்வதேச அரங்கில் பழம்பெரும் ஜனநாயக நாடு எனத் தம்பட்டம் அடிக்கும் மோடி, ஜனநாயகத்தை அழிக்க முயல்கிறார். பெகாசஸ் விவகாரம் தனித்த பிரச்சனை அல்ல. ஜனநாயகத்தை அழிக்கும் முயற்சிகளின்  தொடர்ச்சி. ஜனநாயக நாட்டில் மாற்றுக் கருத்து வரும், விமர்சனம் வரும். கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கக் கூடாது. அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. இந்த அச்சாணியை அரசாங்கம் முறிக்கும்போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது அவர்களின் அரசியல் கடமை" - தோழர் உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #ModiBetrayedIndia #PegasusSnoopgate #PegasusSpyware More: https://youtu.be/kIex6FNkGcE
2021-07-3114 minCPIM Tamilnadu2021-07-2619 minCPIM Tamilnadu2021-07-2610 minCPIM Tamilnadu2021-07-2615 minCPIM Tamilnadu2021-07-2601 minCPIM Tamilnadu2021-07-2606 minCPIM Tamilnadu
CPIM Tamilnaduபெகாசஸ்; எதேச்சதிகாரத்தின் இணைய வழி ஆயுதம்... #Pegasus #PegasusSnoopgate #PegasusSpywareபெகாசஸ் உளவு மென்பொருள் ஊழல், இந்திய மக்களின் அந்தரங்கத்திற்குள் மூக்கை நுழைக்கும் ஒரு வழக்கோ அல்லது சட்டவிரோதமான ஊடுருவலோ அல்லது உளவு அமைப்புகளின் உளவு வேலையோ மட்டுமல்ல. பெகாசஸ் ஒரு ராணுவ உளவு மென்பொருளாகும். அது இணையதளங்களில் ஊடுருவி உளவு பார்ப்பதை புதிய கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. இதன் முழுமையான சித்திரத்தை எவரும் தெளிவாகப் பார்க்க முடியாது. அரசியல் எதிரிகளுக்கு எதிராக பாஜக அரசாங்கம் கடந்த ஏழு ஆண்டு காலமாகக் கட்டி எழுப்பியுள்ள பெரிய அளவிலான எதேச்சதிகார கட்டமைப்பின் ஓர் அங்கம்தான் பெகாசஸ் பயன்பாடு.  இதன் செய்தி கூறுவது என்னவெனில், எதேச்சதிகார இந்துத்துவா ஆட்சியை நிறுவிடவும் ஒருங்கிணைத்திடவும் எந்த வழியையும் அது பின்பற்றும் என்பதேயாகும். #Pegasus #PegasusSnoopgate #PegasusSpyware  English Article: https://bit.ly/3BImjkU வாசிப்பவர்: ராஜசங்கீதன்
2021-07-2607 minCPIM Tamilnadu2021-07-1812 minCPIM Tamilnadu2021-07-1807 minCPIM Tamilnadu2021-07-1804 minCPIM Tamilnadu2021-07-1809 minCPIM Tamilnadu2021-07-1404 minCPIM Tamilnadu2021-07-1308 minCPIM Tamilnadu2021-07-1305 minCPIM Tamilnadu2021-07-1307 minCPIM Tamilnadu2021-07-1205 minCPIM Tamilnadu2021-07-1205 minCPIM Tamilnadu2021-07-1213 minCPIM Tamilnadu2021-07-1207 minCPIM Tamilnadu2021-07-0731 minCPIM Tamilnadu2021-07-0719 minCPIM Tamilnadu2021-07-0709 minCPIM Tamilnadu2021-07-0703 minCPIM Tamilnadu2021-06-3013 minCPIM Tamilnadu2021-06-3009 minCPIM Tamilnadu2021-06-1826 minCPIM Tamilnadu2021-06-0405 minCPIM Tamilnadu
CPIM Tamilnaduமோடி நீங்கள் ஆட்சி செய்தது போதும், ஆட்சியை விட்டு வெளியேறுவது தான் மக்கள் மனதில் இருக்கிற கருத்துமோடி நீங்கள் ஆட்சி செய்தது போதும், ஆட்சியை விட்டு வெளியேறுவது தான் மக்கள் மனதில் இருக்கிற கருத்து, CPIM Tamilnadu இன்றோடி மோடி பிரதமராக பதவியேற்று ஏழு ஆண்டு காலம் ஆகிறது. இதுவரை இவர்கள் ஆட்சிகாலத்தில் செய்த எல்லா நடவடிக்கைகளும் வேண்டாத சட்டங்கள், வேண்டாத திட்டங்கள் , பெரும்பகுதியான மக்களை பாதிக்கக்கூடிய சட்ட திருத்தங்களை இந்த ஆட்சியாளர்கள் நிறைவேற்றிருக்கிறார்கள், அதேபோல் மக்கள் மனதில் இருக்கிற ஒரே கருத்து மக்கள் மாண்டது போதும், மோடி ஆட்சி செய்தது போதும், நீங்கள் ஆட்சியை விட்டு வெளியேறுவது மட்டும் தான் எல்லாருடைய ஒத்த கருத்து என்ற முடிவோடு இருக்கிறார்கள் - தோழர் பெ.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS​ #FarmersProtest​ #Blackday​ #BlackdayagainstGovt​ #BJPFails​ #BJPDestroyingIndia​ #BJPBetrayedFarmers​ Follow us on: Website: https://tncpim.org/​ Facebook: https://www.facebook.com/TNCPIM/​ Twitter: https://twitter.com/tncpim​ Instagram: https://www.instagram.com/tncpim​ Telegram: https://t.me/tncpim​ dailyhunt: https://profile.dailyhunt.in/tncpim​
2021-06-0210 minCPIM Tamilnadu2021-06-0205 minCPIM Tamilnadu2021-06-0210 minCPIM Tamilnadu2021-05-3025 minCPIM Tamilnadu2021-05-2607 minCPIM Tamilnadu2021-05-2608 minCPIM Tamilnadu2021-05-2239 minCPIM Tamilnadu2021-05-2101 minCPIM Tamilnadu2021-05-2109 minCPIM Tamilnadu2021-04-0302 minCPIM Tamilnadu2021-02-0525 minCPIM Tamilnadu2021-02-0408 minCPIM Tamilnadu2021-01-2607 minCPIM Tamilnadu2021-01-2507 minCPIM Tamilnadu2021-01-2408 minCPIM Tamilnadu2021-01-2109 minCPIM Tamilnadu2021-01-2120 minCPIM Tamilnadu2021-01-2009 minCPIM Tamilnadu2021-01-2016 minCPIM Tamilnadu2021-01-1811 minCPIM Tamilnadu2021-01-1716 minCPIM Tamilnadu2021-01-1216 minCPIM Tamilnadu2021-01-1026 minCPIM Tamilnadu2021-01-1015 minCPIM Tamilnadu2021-01-1017 minCPIM Tamilnadu2021-01-1008 minCPIM Tamilnadu2021-01-1017 minCPIM Tamilnadu2021-01-0917 min