Look for any podcast host, guest or anyone
Showing episodes and shows of

Chinmaya Mission Salem

Shows

Talks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 14 - Tiruppavai Verse 12இந்த பதிவு  திருப்பாவை பன்னிரண்டாவது    பாடல் பற்றிய விளக்கவுரை.   பாடல்   பன்னிரண்டு கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிறங்கி      நினைத்து முலை வழியே நின்று பால் சோர நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்      பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற      மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்      அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏல் ஓர் எம்பாவாய்2021-01-2025 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 09 - Tiruppavai Verse 07இந்த பதிவு  திருப்பாவை ஒன்பதாவது பாடல் பற்றிய விளக்கவுரை.   பாடல் ஒன்பது  தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய      தூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!      மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ      ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று      நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்.2021-01-2019 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 31 - Tiruppavai 29 & 30இந்த பதிவு  திருப்பாவை கடைசி பதிவு -   இருபத்தொன்பதாவது மற்றும் முப்பதாவது   பாடல் பற்றிய விளக்கவுரை.   பாடல்  இருபத்தொன்பது      சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன்      பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்! பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ      குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!      எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்      மற்றை நம் காமங்கள் மாற்று ஏல் ஓர் எம்பாவாய்   பாடல்  முப்பது  வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை      திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்      பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே      இங்கு இப்பரிசு உறைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கன் திருமுகத்துச் செல்வத் திருமாலால்      எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்   ஹரி ஓம் !  குருதக்ஷிணா சமர்ப்பிக்க நினைப்பவர்களுக்காக வங்கி கணக்கு விவரங்கள்    வங்கி விவரங்கள் : Account name - Chinmaya Seva Trust  Account number - 309002377302  Account type - Savings account   Bank Name - RBL Bank Bank branch - Salem Branch   IFSC Code - RATN0000147  குருதக்ஷிணை சமர்ப்பித்த பிறகு அந்த விவரங்களை chinmaya.kaivalya@gmail.com என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.2021-01-2038 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 30 - Tiruppavai Verse 28இந்த பதிவு  திருப்பாவை இருபத்தெட்டாவது  பாடல் பற்றிய விளக்கவுரை.  பாடல் இருபத்தெட்டு      கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்      அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப் பிறவி பெருந்தனை புண்ணியம் யாம் உடையோம்      குறைவொன்றும் இல்லாத கோவிந்தா, உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது      அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே      இறைவா! நீ தாராய் பறை ஏல் ஓர் எம்பாவாய்2021-01-2023 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 29 - Tiruppavai Verse 27இந்த பதிவு  திருப்பாவை இருபத்தேழாவது  பாடல் பற்றிய விளக்கவுரை.  பாடல் இருபத்தேழு      கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்      பாடி பறை கொண்டு யாம் பெறு சம்மானம் நாடு புகளும் பரிசினால் நன்றாக      சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்      ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார      கூடியிருந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்2021-01-2024 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 28 - Tiruppavai Verse 26இந்த பதிவு  திருப்பாவை இருபத்தாறாவது  பாடல் பற்றிய விளக்கவுரை.  பாடல் இருபத்தாறு      மாலே! மணிவண்ணா மார்கழி நீராடுவான்      மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன      பாலன்ன வண்ணத்துன் பாஞ்சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே      சாலப்பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே      ஆலின் இலையாய் அருள் ஏல் ஓர் எம்பாவாய்2021-01-2019 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 27 - Tiruppavai Verse 25இந்த பதிவு  திருப்பாவை இருபத்தைந்தாவது   பாடல் பற்றிய விளக்கவுரை.   பாடல் இருபத்தைந்து       ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்       ஒருத்தி மகனாய் ஒளித்து வளர  தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைத்த       கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்  நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை       அருத்தித்து வந்தொம் பறை தருதியாகில்  திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி       வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்2021-01-2017 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 26 - Tiruppavai Verse 24இந்த பதிவு  திருப்பாவை இருப்பதினான்காவது  பாடல் பற்றிய விளக்கவுரை.  பாடல்  இருபத்திநான்கு   அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி      சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி      கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி      வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்      இன்றுயாம் வந்தோம் இரங்கு ஏல் ஓர் எம்பாவாய்2021-01-2020 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 25 - Tiruppavai Verse 23இந்த பதிவு  திருப்பாவை இருபத்திமூன்றாவது    பாடல் பற்றிய விளக்கவுரை.  பாடல்   இருபத்திமூன்று  மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்      சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்ப்பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி      மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன்      கோயில் நின்று இங்ஙனே போந்தருளி, கோப்புடைய சீரிய சிங்காசனத்திலிருந்து, யாம் வந்த      காரியம் ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்2021-01-2023 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 24 - Tiruppavai Verse 22இந்த பதிவு  திருப்பாவை இருபத்திரண்டாவது   பாடல் பற்றிய விளக்கவுரை.  பாடல் இருபத்திரண்டு     அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான      பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற்கீழே சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்      கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ      திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டுங்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்      எங்கள் மேல் சாபம் இழிந்து ஏல் ஓர் எம்பாவாய்2021-01-2018 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 23 - Tiruppavai Verse 21இந்த பதிவு  திருப்பாவை இருபத்தியொன்றாவது  பாடல் பற்றிய விளக்கவுரை.  பாடல் இருபத்தியொன்று    ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப      மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்      ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்      மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண் ஆற்றாது வந்து உன் அடி பணியுமாபோலே      போற்றியாம் வந்தோம் புகழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்2021-01-2020 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 22 - Tiruppavai Verse 20இந்த பதிவு  திருப்பாவை இருபதாவது  பாடல் பற்றிய விளக்கவுரை.  பாடல் இருபது    முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று      கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய் செப்பமுடையாய், திறலுடையாய் செற்றார்க்கு      வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய் செப்பன்ன, மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்      நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய் உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை      இப்போதே எம்மை நீராட்டு ஏல் ஓர் எம்பாவாய்2021-01-2017 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 21 - Tiruppavai Verse 19இந்த பதிவு  திருப்பாவை பத்தொன்பதாவது  பாடல் பற்றிய விளக்கவுரை.  பாடல் பத்தொன்பது    குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்      மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்      வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய் மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை      எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்      தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்2021-01-2015 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 20 - Tiruppavai Verse 18இந்த பதிவு  திருப்பாவை பதினெட்டாவது  பாடல் பற்றிய விளக்கவுரை.  பாடல் பதினெட்டு    உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்      நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்! கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்      வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்      பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாட செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப      வந்து திறவாய் மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்2021-01-2019 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 19 - Tiruppavai Verse 17இந்த பதிவு  திருப்பாவை பத்தொன்பதாவது  பாடல் பற்றிய விளக்கவுரை.  பாடல் பத்தொன்பது   குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்      மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்      வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய் மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை      எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்      தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்2021-01-2022 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 18 - Tiruppavai Verse 16இந்த பதிவு  திருப்பாவை பதினாறாவது  பாடல் பற்றிய விளக்கவுரை.  பாடல் பதினாறு  நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய      கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்      ஆயர் சிறுமியரோமுக்கு, அறைபறை மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்      தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ      நேய நிலைக் கதவம் நீக்கு ஏல் ஓர் எம்பாவாய்2021-01-1821 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 17 - Tirupavai Verse 15இந்த பதிவு  திருப்பாவை பதினைந்தாவது    பாடல் பற்றிய விளக்கவுரை.  பாடல் பதினைந்து எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ      சில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன் வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்      வல்லீர்கள் நீங்களே நான் தான் ஆயிடுக ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை      எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க      வல்லானை மாயானை பாடு ஏல் ஓர் எம்பாவாய்2021-01-1820 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 16 - Tiruppavai Verse 14இந்த பதிவு  திருப்பாவை பதினான்காவது   பாடல் பற்றிய விளக்கவுரை.   பாடல் பதினான்கு உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்      செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்      தங்கள் திருக்கொயில் சங்டகிடுவான் போகின்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்      நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்      பங்கயக் கண்ணானைப் பாடு ஏல் ஓர் எம்பாவாய்2021-01-1821 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 15 - Tiruppavai Verse 13இந்த பதிவு  திருப்பாவை பதிமூன்றாவது    பாடல் பற்றிய விளக்கவுரை.   பாடல் பதிமூன்று புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்      கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்      வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண்! போது அரிக்கண்ணினாய்      குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்      கள்ளம் தவிர்த்து கலந்து ஏல் ஓர் எம்பாவாய்2021-01-1720 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 13 - Tiruppavai Verse 11இந்த பதிவு  திருப்பாவை பதினொன்றாவது   பாடல் பற்றிய விளக்கவுரை.   பாடல்  பதினொன்று கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து      செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும் குற்ற மொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே      புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய் சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்து நின்      முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ      எற்றுக்கு உறங்கும் பொருள் ஏல் ஓர் எம்பாவாய்!2021-01-1716 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 12 - Tiruppavai Verse 10இந்த பதிவு  திருப்பாவை பத்தாவது  பாடல் பற்றிய விளக்கவுரை.   பாடல் பத்து  நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!      மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்      போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்      தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே      தேற்றமாய் வந்து திற ஏல் ஓர் எம்பாவாய்!2021-01-1718 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 11 - Tiruppavai Verse 9இந்த பதிவு  திருப்பாவை ஒன்பதாவது பாடல் பற்றிய விளக்கவுரை.   பாடல் ஒன்பது  தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய      தூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!      மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ      ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று      நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்.2021-01-1725 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 10 - Tiruppavai Verse 8இந்த பதிவு  திருப்பாவை எட்டாவது பாடல் பற்றிய விளக்கவுரை.   பாடல் எட்டு  கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.2021-01-1722 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 08 - Tiruppavai verse 6இந்த பதிவு  திருப்பாவை ஐந்தாவது   பாடல் பற்றிய விளக்கவுரை.   பாடல் ஐந்து     மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்2021-01-1721 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 07 - Tiruppavai Verse 5இந்த பதிவு  திருப்பாவை ஐந்தாவது   பாடல் பற்றிய விளக்கவுரை.   பாடல் ஐந்து     மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்2021-01-1733 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 06 - Tiruppavai Verse 04இந்த பதிவு  திருப்பாவை நான்காவது   பாடல் பற்றிய விளக்கவுரை.   பாடல் நான்கு    ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்      ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேரி ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்      பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில் ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து      தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்      மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.2021-01-1725 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 05 - Tiruppavai Verse 3இந்த பதிவு  திருப்பாவை மூன்றாவது  பாடல் பற்றிய விளக்கவுரை.                 பாடல் மூன்று  ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி      நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து      ஓங்கு பெருஞ் செந்நொலூடு கயல் உகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப      தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்      நீங்காத செல்வம் நிறைந்து ஏல் ஓர் எம்பாவாய்.2021-01-1726 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 04 - Tiruppavai Verse 2இந்த பதிவு  திருப்பாவை இரண்டாவது பாடல் பற்றிய விளக்கவுரை.   பாடல் இரண்டு  வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி, நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்; செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்; ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.2021-01-1728 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 03 - Story of Tiruppavai - Verse 1 - Tiruppavaiஇந்த பதிவு  பகுதி 1 - திருப்பாவையின் வரலாறு,   பகுதி 2 - பாடல் ஒன்று பற்றிய உரை .  பகுதி ஒன்றில் திருப்பாவை தோன்றியது எங்ஙனம் ?    பகுதி  இரண்டில் திருப்பாவையின் முதல் பாடலின் பொருள் விளக்கம்  என்று இந்த பதிவு இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது.   பாடல் - 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன், ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாரா யணனே, நமக்கே பறை தருவான், பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.2021-01-1732 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 02 - Story of Andal – Tiruppavaiஇந்த பதிவு ஆண்டாள் மற்றும் திருப்பாவையின் மகிமையை பற்றிய உரை.   ஆண்டாள் மற்றும் திருப்பாவையின் மகிமையை குறித்த பாடல்கள்:   அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப் பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு  பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதமனைத்துக்கும் வித்தாகும் - கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு;2021-01-1714 minTalks by Swami ShasvatanandaTalks by Swami ShasvatanandaEpisode 01 - Glory of Andal - Tiruppavaiஇந்த பதிவு ஆண்டாள் மற்றும் திருப்பாவையின் மகிமையை பற்றிய உரை.    ஆண்டாள் மற்றும் திருப்பாவையின் மகிமையை குறித்த பாடல்கள்:   அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப் பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு  பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதமனைத்துக்கும் வித்தாகும் - கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு;2021-01-1711 min