Look for any podcast host, guest or anyone
Showing episodes and shows of

Rahul Moorthi

Shows

Payanangal Mudivathillai2021-09-1802 minPayanangal Mudivathillai2021-09-1700 minPayanangal Mudivathillai2021-09-1600 minPayanangal Mudivathillai2021-09-1500 minPayanangal Mudivathillai2021-09-1404 minPayanangal Mudivathillai2021-09-1208 minPayanangal Mudivathillai2021-09-1100 minPayanangal Mudivathillai2021-09-1000 minPayanangal Mudivathillai2021-09-0904 minPayanangal Mudivathillai2021-09-0805 minPayanangal Mudivathillai2021-09-0705 minPayanangal Mudivathillai2021-09-0600 minPayanangal Mudivathillai
Payanangal MudivathillaiSivaPuranam Part - 4 | சிவபுராணம் பகுதி - 4 (திருவாசகம்)திருச்சிற்றம்பலம்குறிப்பு:1. இறைவன் எங்கும் நிறைந்து இருக்கும் பொழுது அவர் எதனை நீங்குவார், புதிதாக வருவதற்கு அவர் இல்லாதது என்ன உள்ளது, அவர் கலந்து இல்லாத பொருள் தான் ஏது – புதிதாகக் கலப்பதற்கு ? இவ்வாறு எல்லாப் பொருளிலும் இருந்த போதிலும், பொருளின் தன்மையால் குறைபடாமல் தான் என்றும் தூயவனான புண்ணிய மூர்த்தியாகவே உள்ளார்.இறைவன் சொற்களால் சொல்லி முடியாதவர். நுண் உணர்வால் அறியப்படுபவர். (ஒ. அவனருளே கண் கொண்டு காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே–தேவாரம் )சிவபெருமான் எல்லாப் பொருள்களுடனும் கலந்து தோன்றினும் இவை எதுவும் அவரல்ல. அவர் கலந்து இருப்பது போலவே எல்லாம் கடந்தும் உள்ளார்.சிவபெருமானுக்கு அவதாரம் இல்லை. அவர் பிறப்பது இல்லை.3. இறைவன் அன்பர்களுக்கு எளியவனாகக் காட்சி அளித்த போதிலும், அவருடைய பேரியல்பு யாராலும் முழுதும் ஆய்வது பற்றி எண்ணியும் பார்க்க இயலாதது. எனவே தான் அவருடைய இயல்பினை சற்றேனும் காண முயல்கின்ற ஞானிகளின் திறனை வியந்து கூறுகின்றார் மாணிக்க வாசகர். (ஒ. பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேரறியாமை விளம்புகின்றேனே – திருமந்திரம்)இருள் என்பது (ஒளி) இன்மையைக் குறிக்கும். உலகங்கள் எல்லாம் ஒடுங்கிய பின்னர் இறைவனைத் தவிர வேறு எதுவும் இல்லாத அந்நிலை ஏதுமற்ற இருள் போன்றது அவ்விருளில் ஒளியாக இறைவன் ஆடுகின்றார்.பொருளினை உணர்ந்து சொல்லுவதன் மூலம் உணர்வினோடு ஒருமைப்பட்டுத் தொழுதலால் அவ்வகை வணக்கத்தின் பெருமை வலியுறுத்தப்படுகின்றது. திருச்சிற்றம்பலம்.
2021-09-0606 minPayanangal Mudivathillai
Payanangal MudivathillaiSivaPuranam Part - 3 | சிவபுராணம் பகுதி - 3 (திருவாசகம்)திருச்சிற்றம்பலம்குறிப்பு:1. பாசத்தால் கட்டுண்ட பசுக்களின் உய்வின் பொருட்டு இறைவனால் நுண்ணுடலும் (சூக்ஷ்ம சரீரம்) அவற்றின் வினைக்கேற்ற (பரு) உடல்கள் பின்னும் அருளப்பட்டன என்பது சித்தாந்தம் கூறும் உலகின் துவக்கம்.2. நுதல் – நெற்றி; இறைஞ்சி – வணங்கி; இறந்து – கடந்து; புகழும் ஆறு – புகழும் வகை.விருகம் – மிருகம்; தாவர சங்கமம் – (ஸ்தாவர ஜங்கமம்) சராசரம்.இறைவனுடைய பெருமையை அறிந்து அவருடைய திருநாமங்களில் மூழ்கியிருப்போருக்கு இங்கேயே வீடுபேறு – வேதம்.3. வேதங்கள் பலவாறெல்லாம் ஆழ்ந்து ஆராய்ந்தும், பலபல கோணங்களில் கூறியும் அவர் தம் பெருமையைக் கூறச் சொற்கள் இல்லாமையை உணர்த்துகின்றன. அத்தகு பெரிய அவரோ மிகச் சிறியவற்றிலும் நிறைந்துள்ளார். என்ன விந்தை இது ?!சுடர் மிகுவதால் இருளுக்குக் கேடு – பசவண்ணர். உள்ளத்தில் மெய்ச்சுடரான இறைவன் வர பொய்யிருளுக்குக் கேடு.4. வெய்ய – காய்கின்ற/ சூடான; தணிய – குளுமையான.இறைவனுக்கு பிறவற்றைப் போலத் தோற்றம், வாழ்வு, முடிவு இல்லாமையைக் குறிப்பிட்டு, அப்பெருமானே மற்ற எல்லாப் பொருள்களுக்கும் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்கள் மூலம் இயங்கச் செய்கிறார் என்னும் திறத்தை வெளிப்படுத்துகிறார்.5. ஒப்பற்ற உன்றன் அடியார் நடுவுற்றிருக்கும் அருளைப் புரிவாய்.6. மணமானது காண இயலாத நுண் பொருள்களாகப் பரவுகின்றது. இறைவன் அந்த நுண்மையினும் நுண்மையாக இருக்கிறார்.7. சேய்மை – தொலைவு; நணியது – அருகில் இருப்பது; மாற்றம் – சொல்
2021-09-0603 minPayanangal Mudivathillai
Payanangal MudivathillaiSivaPuranam Part - 2 | சிவபுராணம் பகுதி - 2 (திருவாசகம்)திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.திருச்சிற்றம்பலம்🙏வேகங் கெடுத்தாண்ட வேந்த னடி வெல்கபிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்கபுறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்ககரங்குவிவார் உள் மகிழுங் கோன்கழல்கள் வெல்கசிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்கஈச னடி போற்றி எந்தை அடிபோற்றிதேச னடிபோற்றி சிவன்சேவடி போற்றிநேயத்தே நின்ற நிமலன் அடி போற்றிமாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றிசீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றிஆராத இன்பம் அருளுமலை போற்றிசிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால்அவனருளாலே அவன்தாள் வணங்கிச்சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னைமுந்தை வினைமுழுதும் ஓய உரைப்பனியான்
2021-09-0603 minPayanangal Mudivathillai2021-09-0602 minPayanangal Mudivathillai
Payanangal MudivathillaiThodudaiya Seviyan | தோடுடைய செவியன் பகுதி - 3 ( தேவாரம் )மறைகலந்தஒலி பாடலோடாடல ராகிமழு வேந்திஇறைகலந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்பிறைகலந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (6)சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்தஉடைமுயங்கும்அர வோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்கடல்முயங்குகழி சூழ்குளிர்கானல்அம் பொன்னஞ்சிற கன்னம்பெடைமுயங்குபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (7)வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்தஉயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்துயரிலங்கும்உல கிற்பலஊழிகள் தோன்றும்பொழு தெல்லாம்பெயரிலங்கு பிரமாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (8)தாணுதல் செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்நீணுதல் செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்வாணுதல் செய்மக ளீர்முதலாகிய வையத்தவ ரேத்தப்பேணுதல் செய்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (9)புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லாஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்மத்தயானைமறுகவ்வுரி போர்த்ததோர் மாயம்இது வென்னப்பித்தர்போலும்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (10)அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேயபெருநெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னைஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்ததிருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளி தாமே. (11)
2021-09-0605 minPayanangal Mudivathillai
Payanangal MudivathillaiThodudaiya Seviyan | தோடுடைய செவியன் பகுதி - 2 ( தேவாரம் )“தோடுடைய செவியன்” பாடல் :நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதி சூடிஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப்பேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (3)விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே. (4)ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்இவ னென்னஅருமையாகவுரை செய்யஅமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலம்இது வென்னப்பெருமைபெற்றபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (5) - திருஞானசம்பந்தர்
2021-09-0602 minPayanangal Mudivathillai2021-09-0602 minPayanangal Mudivathillai2021-09-0605 minPayanangal Mudivathillai2021-09-0607 minPayanangal Mudivathillai2021-09-0611 minPayanangal Mudivathillai2021-09-0604 minPayanangal Mudivathillai2021-09-0602 minPayanangal Mudivathillai2021-09-0603 minPayanangal Mudivathillai2021-09-0608 minPayanangal Mudivathillai
Payanangal MudivathillaiVijayalaya Chola | கோப்பரகேசரி வர்மன் விஜயாலய சோழன்பண்டைத் தமிழகத்தில் மூவேந்தர்களுள் ஒருவராகப் பெரும் புகழுடன் விளங்கிய சோழர்கள் நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தனர். இந்த நிலையைப் போக்கி சோழரின் பெருமையை மீண்டும் தமிழகத்தில் நிலை நிறுத்தியவர் கோப்பரகேசரி வர்மன் விசயாலய சோழன் ஆவார். காந்த மனோகரச் சோழனின் மகனான விஜயாலய சோழன் கி.பி 850இல் சிற்றரசராக உறையூரில் பதவி ஏற்றார். இவரே பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டவர். கி.பி.880ல் நடந்த திருப்புறம்பியப் போரில் அக்காலத்தில் வலிமை பெற்றிருந்த பாண்டியர்களுக்குள் இருந்த உட்பகையைப் பயன்படுத்தி முத்தரையர்களின் கீழிருந்த தஞ்சாவூரைத் தாக்கி, பல்லவ பேரரசிற்கு சார்பாக போரிட்டு தஞ்சையை கைப்பற்றினார். இதற்க்கு பின்னர் 250 வருடம் தஞ்சாவூர் சோழர்களின் தலைநகராக விளங்கியது.
2021-09-0606 minPayanangal Mudivathillai2021-09-0603 minPayanangal Mudivathillai2021-09-0609 minPayanangal Mudivathillai2021-09-0612 minPayanangal Mudivathillai2021-09-0608 minPayanangal Mudivathillai2021-09-0600 minPayanangal Mudivathillai2021-09-0600 minPayanangal Mudivathillai2021-09-0600 minPayanangal Mudivathillai
Payanangal Mudivathillaiகண்ணதாசனின் “அனுபவமே கடவுள்” | “Anubavame Kadavul” by Kannadasan“அனுபவமே கடவுள்”பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்பிறந்து பாரென இறைவன் பணித்தான்!படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்படித்துப் பாரென இறைவன் பணித்தான்!அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்அறிந்து பாரென இறைவன் பணித்தான்!அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!பாசம் என்பது யாதெனக் கேட்டேன்பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்மணந்து பாரென இறைவன் பணித்தான்!பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!முதுமை என்பது யாதெனக் கேட்டேன்முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!வறுமை என்பது என்னெனக் கேட்டேன்வாடிப் பாரென இறைவன் பணித்தான்!இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்இறந்து பாரென இறைவன் பணித்தான்!'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
2021-09-0601 minPayanangal Mudivathillai2021-09-0601 minPayanangal Mudivathillai
Payanangal Mudivathillaiபுறநானூறு - 6 | Purananooru - 6இப்பாடல் பாடாண்திணை யாகும்.துறை: நகர்வலஞ் செயற்குப் பணியரென வீடும், ஏந்துகை யெதிர் இறைஞ்சுக என அறமும், புகையெறித்தலான் வாடுகவெனப் பொருளும், முகத்தெதிர் தணிக என இன்பமும் கூறப்படுகிறது. இவ்வாறு செய்கவென அரசியல் கூறப்படுதலால் இது செவியறிவுறூஉம் துறையாகும். மதியமும் ஞாயிறும் போல மன்னுக என்றதனால் வாழ்த்தியல் என்ற துறையுமாகும்.அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும் பெறுக என வாழ்த்துவது சான்றோர்க்கு இயல்பாதலால், காரிகிழாரும் முதுகுடுமிப் பெருவழுதி பாண்டியற்கு, பணிக என்பதனால் வீடும் இறைஞ்சுக என்பதனால் அறமும், வாடுக என்பதனால் பொருளும் தணிக என்பதனால் இன்பமும் பெற வாழ்த்தினார்.
2021-09-0603 minPayanangal Mudivathillai
Payanangal Mudivathillaiபுறநானூறு - 5“அருளும் அருமையும்”! | Purananooru - 5 Arulum Arumaiyum!பாடியவர்: நரிவெரூஉத் தலையார்.பாடப்பட்டோன்: சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல்.திணை: பாடாண்.துறை: வெவியறிவுறூஉ: பொருண் மொழிக் காஞ்சியும் ஆம்.சிறப்பு: பார்வையானே நோய் போக்கும் கண்ணின் சக்தி பற்றிய செய்தி.பாடுதற்குத் தகுதியுடைய ஓர் ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது பாடாண்திணை எனப்படும்.துறை: தேசத்தைக் காப்பது குழந்தையைப் பாதுகாப்பது போன்றது என்பதால் இது செவியறிவுறூஉ துறையென்றும், அருளையும், அன்பையும் நீக்கி பாவச்செயல்கள் செய்து நீங்காத நரகத்தை தமக்கு இடமாக்கிக் கொள்ளும் நல்லறிவில்லாத தாழ்ந்தோருடன் சேராது நீ இருக்க வேண்டும் என்பதால் இது பொருண்மொழிக் காஞ்சி துறையென்றும் கொள்ளலாம்.
2021-09-0603 minPayanangal Mudivathillai
Payanangal Mudivathillaiபுறநானூறு - 4 “தாயற்ற குழந்தை”! | Purananooru - 4 Thaiyatra Kulandhai!பாடியவர்: பரணர்.பாடப்பட்டோன் : சோழன் உருவப் பறேர் இளஞ்சேட் சென்னி.திணை: வஞ்சி.துறை: கொற்ற வள்ளை.சிறப்பு : சோழரது படைப் பெருக்கமும், இச் சோழனது வெற்றி மேம்பாடும்.திணை: வஞ்சி. மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டுடன் வீரர்கள் வஞ்சிப்பூவைச் சூடிப் போரிடுவது வஞ்சித் திணை ஆகும்.துறை: கொற்றவள்ளை. கொற்றவள்ளை என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். "கொற்றம்" என்பது வெற்றியைக் குறிக்கும். வள்ளை என்பது ஒரு பாடல் வகை, பெண்கள் நெல் குற்றும்போது தலைவனைப் புகழ்ந்து பாடுவது. எனவே, போரில் வென்ற அரசனைப் புகழ்வதையும், பகைவர் நாடு அழிவதற்காக வருந்துவதையும் பொருளாகக் கொள்ளும் இத்துறை "கொற்ற வள்ளை" எனப்பட்டது.
2021-09-0603 minPayanangal Mudivathillai
Payanangal Mudivathillaiபுறநானூறு - 3 “வன்மையும் வண்மையும்”! | Purananooru - 3 Vanmaiyum Vannmaiyum!https://youtube.com/playlist?list=PLwtamDjpMVS4tiGRJ0h_8HNfiV0Suazkqபாடியவர்: இரும்பிடர்த் தலையார்.பாடப்பட்டோன்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.திணை: பாடாண்.துறை : செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.சிறப்பு : இரும்பிடத் தலையாரைப் பற்றிய செய்தி.உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடைநிலவுக்கடல் வரைப்பின் மண்ணக நிழற்றஏம முரச மிழுமென முழங்கநேமி யுய்த்த நேஎ நெஞ்சிற்றவிரா வீகைக் கவுரியர் மருக 5செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவபொன்னோடைப் புகரணிநுதற்றுன்னருந்திறற் கமழ்கடாஅத்தெயிறுபடை யாக வெயிற்கத விடாஅக்கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற் 10பெருங்கை யானை யிரும்பிடர்த் தலையிருந்துமருந்தில் கூற்றத் தருந்தொழில் சாயாக்கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதிநிலம்பெயரினு நின்சொற்பெயரல்பொலங்கழற்காற் புலர்சாந்தின் 15விலங்ககன்ற வியன்மார்பஊரில்ல வுயவரியநீரில்ல நீளிடையபார்வ லிருக்கைக் கவின்கண் ணோக்கிற்செந்தொடை பிழையா வன்க ணாடவர் 20அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந் துயவும்உன்ன மரத்த துன்னருங் கவலைநின்னசை வேட்கையி னிரவலர் வருவரதுமுன்ன முகத்தி னுணர்ந்தவர் 25இன்மை தீர்த்தல் வன்மை யானே.(உயங்கு – வருந்து suffer be in pain or distress)(செந்தொடை - Aim in shooting; அம்பு முதலியவற்றை எய்யுங் குறி)கருத்து : பூமியே பிளந்தாலும் உன் ஆணையாகிய சொல் பிறழாது நீ இருக்க வேண்டும்!-இதுதான் தமிழன்!#Purananooru #tamilLiterature #SangamPeriod #tamil #புறநானூறு #சங்கம் #தமிழ்
2021-09-0603 minPayanangal Mudivathillai
Payanangal Mudivathillaiபுறநானூறு - 2 | Purananooru - 2தலைப்பு - சங்கநூல்.நூல் - புறநானூறு.பாடல் எண் : 2.பாடியவர் - முரஞ்சியூர் முடிநாகராயர்.பாடப்பட்டோர் - சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்.திணை - பாடாண் திணைதுறை செவியறிவுறூஉ, வாழ்த்தியலுமாம்.கோணம் : 1ஐவர் = பஞ்ச பாண்டவர்ஈர் ஐம்பதின்மர் = நூற்றுவர் = துரியோதனன் ஆதியர்இந்த ஐவரும் நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இந்தச் சேர அரசன் உதியன் பெருஞ்சோறு வழங்கினான்.இதனால் இவன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தவன்.கோணம் : 2ஐவர் = பஞ்சவர் = பாண்டியர்நூற்றுவர் = சதகர்னர் (சதம் = நூறு)பாண்டியர்க்கும் சதகர்ணியர்க்கும் நடந்த போரில் இருவரும் போர்க்களத்தில் மாண்டபோது இருபால் படையினருக்கும் பெருஞ்சோறு வழங்கிப் பேணினான்.
2021-09-0604 minPayanangal Mudivathillai2021-09-0603 minPayanangal Mudivathillai2021-09-0600 minPayanangal Mudivathillai2021-09-0600 minPayanangal Mudivathillai2021-09-0600 minPayanangal Mudivathillai2021-09-0606 minPayanangal Mudivathillai2021-09-0601 minPayanangal Mudivathillai2021-09-0600 minPayanangal Mudivathillai2021-09-0601 min