Look for any podcast host, guest or anyone
Showing episodes and shows of

Thanga Jaisakthivel

Shows

தமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதற்காலிக உன்னதங்கள் ~ ரேவதி பாலு தற்காலிக உன்னதங்கள் ~ ரேவதி பாலு2023-10-3013 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesபிரியங்கள் ஓய்வதில்லை ~ ரேவதி பாலுசென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்றிருக்கிறார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்பு நூல்கள், ஒரு ஆன்மிகக் கட்டுரைத் தொகுப்பு நூல் மற்றும் ஒரு பல்சுவை கட்டுரை தொகுப்பு வெளியாகியுள்ளன. இவருடைய நாடகங்கள் சென்னை வானொலி, பொதிகை தொலைக்காட்சியில் ஒலி, ஒளி பரப்பாகியுள்ளன. சென்னை வானொலியில் ஐந்து வருடங்கள் தொடர்ந்து 'நகர்வலம்' நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார். 2023-10-3009 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesநஞ்சு ~ வாசந்திபங்கஜம் எனும் இயற்பெயரைக் கொண்ட வாஸந்தி, மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் வரலாறு துறைகளில் பட்டம் பெற்றவர். நோர்வே நாட்டின் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் முதுகலைச் சான்றிதழ் பெற்றவர். இந்தியா டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாச்சாரம், அரசியல் என்று பல்வேறு புள்ளிகளைத் தொட்டு செல்லும் இவரது கட்டுரைகளில் பல அவை வெளிவந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன. 2023-10-2323 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஇஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி ~ கண்மணி ராஜாஇஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி எனும் சிறுகதையை கண்மணி ராஜா எழுதியுள்ளார். இவரின் இந்தக் கதை தமிழ் சிறுகதை உலகில் மிகவும் பேசப்பட்ட ஒரு கதையாகும்.2023-10-1607 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesகுழப்பத்தின் சுற்றுப்பாதை ~ சல்மாகுழப்பத்தின் சுற்றுப்பாதையில், ஒரு பெண் தன் கல்வியறிவற்ற தாய்க்கு அவள் எழுப்பும் காதல், வெறுப்பு மற்றும் கோபம் போன்ற முரண்பட்ட உணர்ச்சிகளை சமாளிக்க கடிதம் எழுதுகிறாள். தாய், தன் கணவனுக்கு அடிமையாகி, தன் குழந்தைகளின் மீது பற்று கொண்டு, மருமகளை வீட்டை விட்டு விரட்டும் அளவுக்குத் துன்புறுத்தினாள். கடிதத்தில், அவள் இந்த தேவையற்ற விரோதத்தை உணர முயற்சிக்கிறாள், ஆனால் அவளுடைய செயல்களை அரிதாகவே புரிந்து கொள்ள முடியவில்லை. சல்மா கவிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். தொண்ணூறுகளின் இறுதியில் எழுதத் தொடங்கினார். சலீம்ஜாஃபர், முஹம்மதுநதீம் என இரண்டு புதல்வர்களைக் கொண்ட சல்மா பொன்னாம்பட்டிதுவரங்குறிச்சி பேரூராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 2006ல் மருங்காபுரி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். இவர் பல கவிதை நூல்களை எழுதியுள்ளார். பின்னர் தமிழ்நாடு சமூகநல வாரிய தலைவியாக, கவிஞர் சல்மா நியமனம் செய்யப்பட்டார். தி.மு.க.வில் மகளிர்அணி பிரச்சாரக்குழு செயலாளராக பணியாற்றி வருகிறார். 2023-10-091h 00தமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஓர் அகலிகளையின் மகள் ~ அய்க்கண்அய்க்கண் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார், தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். இவர் 800 க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், நாவல்களும் எழுதியுள்ளார். தமிழக அரசு பதினாறு சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. அதில் இவரது கதையும் இடம்பெற்றுள்ளது. அகில இந்திய வானொலி நிலையம் நடத்திய நாடகப் போட்டியில் இவர் எழுதிய நாடகம் முதல் பரிசு பெற்றது. இந்நாடகம் 19 தேசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. இவர் எழுதிய, மண் எனும் சிறுகதை தற்போது 12 ஆம் வகுப்பிற்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழ் எழுத்தாளா் சங்க சிவகங்கை மாவட்டத் தலைவராக இருந்தவர். தமிழக அரசின் அண்ணா விருது பெற்றவர்.2023-10-0229 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஷர்புதீன் பக்ரீஷா ~ கழனியூரன்எம். எஸ். அப்துல் காதர் தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் கழனியூரன் என்னும் புனைப்பெயரில் கவிதை, கதை, கட்டுரைகள் எழுதியவர். கரிசல்காட்டு எழுத்தாளரான கி. இராசநாராயணனின் தொடர்பால் நாட்டார் வழக்காற்றுத் துறையில் ஈடுபாடு கொண்டார். திருநெல்வேலி மாவட்ட நாட்டார் கதைகளைத் தொகுத்ததாலும் அப்பகுதியின் வழக்காறுகளைத் தன்னுடைய படைப்புகளில் வெளிப்படுத்துவதாலும் இவரை தமிழிலக்கிய உலகம் இவரை செவக்காட்டு கதைசொல்லி என்கிறது. 2023-09-2510 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesவெள்ளிக்கிழமை ~ நாகூர் ரூமிஇவர் சாகுல் அமீது, சித்தி ஜெமீமா பேகம் ஆகியோருக்கு தலைமகனாக நாகூரில் பிறந்தார். ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றிய இவர் தமது குட்டியாப்பா எனும் சிறுகதைத் தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகில் கவனம் பெற்றார். இந்தத் தொகுப்பு கேரளப் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவர்களுக்கு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழ்த்துறையிலும் குட்டியாப்பா தொகுதியிலிருந்து பத்து கதைகள் தமிழிலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. கவிதை, கட்டுரை, நாவல், குறுநாவல், சுய முன்னேற்றம் வாழ்க்கை வரலாறு, ஆன்மிகம், மொழியாக்கம் என் பல்வேறு துறைகளிலும் இதுவரை இவர் 51 நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் ஒன்பது நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. 2023-09-1813 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesநளாயினி ~ கலைஞர் மு. கருணாநிதிகருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இவர் முத்தமிழஞர் என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். முரசொலி என்னும் துண்டு வெளியீட்டை 1942-ஆம் ஆண்டில் வெளியிட்டார். முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோரை அழைத்து தம் மாணவர் மன்ற அணித்தோழர்களுடன் கொண்டாடினார். இடையில் சில காலம் அவ்விதழ் தடைபட்டது. பின்னர் 1946 முதல் 1948 மாத இதழாக நடத்தினார். சற்றொப்ப 25 இதழ்கள் வரை வந்து மீண்டும் இதழ் தடைபட்டது. மீண்டும் 1953-இல் சென்னையில் மாத இதழாகத் தொடங்கினார். 1960-ஆம் ஆண்டில் அதனை நாளிதழாக மாற்றினார். 2023-09-1115 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஹிட்லினி ~ ஆதவன் தீட்சண்யாஎஸ். எம். இரவிச்சந்திரன்⁠ என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் தீட்சண்யா ⁠தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்⁠ (தமுஎகச) பொதுச்செயலாளராகவும், ⁠தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார். கவிஞர், எழுத்தாளர் என பன்முகங்களுடன் அறியப்படுகிறார்.⁠⁠ புதுவிசை கலாச்சாரக் காலாண்டிதழின் மதிப்புறு ஆசிரியராகவும் செயல்பட்டார்.⁠2023-09-0420 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஒரு குறிப்பிட்ட சந்தர்பத்தில் ~ சு.சமுத்திரம்சு.சமுத்திரம் தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். இவர் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் பணியாற்றினார். இவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன இவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் ஒரு சோஷியலிசவாதி. இவரது படைப்புகளில் சோஷியலிசக் கருத்துக்கள் பரவியிருந்தது. அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் இவரது படைப்புகளின் முக்கியக்களமாக அமைந்தன. 1990ல் இவரது புதினம் வேரில் பழுத்த பலா சாகித்திய அகாதமி விருது பெற்றது. 2003ல் சென்னையில் இவர் ஒரு விபத்தில் காலமானார்2023-08-2827 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதர்மத்தின் ஆகுதி ~ அ.வெண்ணிலாஅ. வெண்ணிலா தமிழக எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். கவிஞர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர், ஆசிரியர், சிறு பத்திரிகை ஆசிரியர் என பன்முக ஈடுபாடுகளுடன் தமிழ் உலகில் இயங்கிவருகிறார். பெண்ணியம் சார்ந்த கருத்துகளை முன்னெடுத்து இலக்கியம் படைத்து வருவது வெண்ணிலாவின் தனித்துவமாகும். அன்றாட வாழ்வின் இன்னல்களை புனைவுகள் ஏதுமின்றி படைப்பாக்குவது இவரது ஆற்றலாகும். இவர் எழுதிய படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான பாடத்திட்டங்களில் பாடமாகவும் இடம்பெற்றுள்ளன. 2009-2010 ஆம் ஆண்டு காலத்தில் தமிழகத்தின் சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி புதிய பாடப்புத்தக உருவாக்கத்தில் பங்களிப்பு வழங்கியுள்ளார்.2023-08-2136 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesராஜ வைத்தியம் ~ மைதிலி சம்பத்ராஜ வைத்தியம் ~ மைதிலி சம்பத்2023-08-1403 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஜெயித்தாளா தோற்றாளா ~ மைத்திலி சம்பத்ஜெயித்தாளா தோற்றாளா ~ மைத்திலி சம்பத்2023-08-0705 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesபுலி நகம் ~ மைதிலி சம்பத்புலி நகம் மிக முக்கியமான சிறுகதை. மைதிலி சம்பத் தமிழின் மிக முக்கியத்துவம் வாய்ந்த எழுத்தாளர்.2023-07-3115 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesபருந்துகள் ~ மாதவிக்குட்டிகமலா தாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுராயா அல்லது மாதவிக்குட்டி, ஓர் இந்திய எழுத்தாளர். இவர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை. கமலா தாஸ் 1934 ஆம் ஆண்டு மார்ச்சு 31 அன்று கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' (தற்போது திருச்சூர் மாவட்டம்) என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை வி.எம்.நாயர், மாத்ருபூமி என்ற மலையாள தினசரி செய்திதாள் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றினார். தாயார் நலபாத் பாலாமணி அம்மா புகழ்பெற்ற மலையாள கவிஞர் ஆவார். 2023-07-241h 00தமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesபூனைகள் இல்லாத வீடு ~ சந்திராசந்திரா தங்கராஜ் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், திரைப்பட இயக்குனர். மலைநிலத்தின் இயற்கைச் சித்தரிப்பும், இழந்தவற்றிற்கான ஏக்கமும், நாட்டார் கதைகளின் சாயலும், பெண் மனத்தின் நுட்பமான அவதானங்களும் கொண்டவை அவரது படைப்புகள். சந்திராவின் முதல் சிறுகதை புளியம்பூ 2000-ல் எழுதப்பட்டது. 2006-ல் காலச்சுவடு பெண் எழுத்தாளர்களுக்கான புதுமைப்பித்தன் நினைவு சிறுகதைப் போட்டிக்கு அனுப்பிய புளியம்பூ மற்றும் கிழவிநாச்சி சிறுகதைகள் முறையே இரண்டாம், மூன்றாம் பரிசைப் பெற்றன. வாய்மொழிக்கதைகள் சொல்லும் கதைசொல்லியின் சாயலில் அவரது தொடக்ககாலக் கதைகள் இருந்தன. முதல் சிறுகதைத் தொகுப்பு பூனைகள் இல்லாத வீடு உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடாக 2007-ல் வெளிவந்தது. (https://tamil.wiki/wiki/சந்திரா_தங்கராஜ்)2023-07-1733 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesமரப்பாச்சி ~ உமா மகேஸ்வரிஉமா மகேஸ்வரி எனும் மஹி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் ஆவார். இவர் பதின் பருவம் முதல் எழுதி வருகிறார். உமா மகேஸ்ரி தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று விரிவாகப் பயணம் செய்பவர் . தற்பொழுது, கணவர், குழந்தைகளுடன் ஆண்டிபட்டியில் வசிக்கிறார். இவரின் இந்தக் கதை குழந்தைகளின் உலகினை நம் கண்முன்னர் காட்டிச் செல்கிறார்.2023-07-1020 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஹார்மோனியம் ~ செழியன்செழியன் (Chezhiyan) தமிழ்த் திரைப்படத்துறையில் முன்னணி ஒளிப்பதிவாளராக உள்ளார். இவர் கட்டுமானத் துறைப் பொறியியல் படிப்பை முடித்தபின் பி. சி. சிறீராமிடம் ஒளிப்பதிவாளராக தன் பணியைத் தொடங்கினார். செழியன் தமிழ்நாட்டின் சிவகங்கையில் பிறந்தவர். கல்லூரி என்ற திரைப்படத்தின் அறிமுகமாகி, இயக்குநர் பாலாவின் பரதேசி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராகி, அப்படத்தின் ஒளிப்பதிவுக்காக 2013 ல் இலண்டன் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினைப் பெற்றார். இவரது இந்தக் கதை தமிழ் சிறுகதைகளில் முக்கியமான ஒரு கதையாகப் பார்க்கப்படுகிறது.2023-07-0235 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஅழகர்சாமியின் குதிரை ~ பாஸ்கர் சக்திஅழகர்சாமியின் குதிரை எழுதிய பாஸ்கர் சக்தி ஒரு திரைக்கதை ஆசிரியரும் கூட. இவரது கதைகள் மக்களின் வாழ்வியலை எடுத்துக்கூறுபவையாக உள்ளது.2023-06-261h 10தமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesவேட்டை ~ யூமா வாசுகியூமா வாசுகி என்ற புனைபெயரில் எழுதும் தி. மாரிமுத்து கவிஞர், புனைகதையாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறன்கொண்டு இயங்கி வருகிறார். மலையாள எழுத்தாளர் எழுதிய `கசாக்கிண்ட இதிகாசம்' எனும் நூலை ‘கசாக்கின் இதிகாசம்' என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்ததற்காக, பிற மொழியிலிருந்து தமிழுக்குச் செய்யப்படும் மொழிபெயர்ப்புக்காக 2017- ஆம் ஆண்டுக்கான ⁠சாகித்ய அகாடமி விருது⁠ இவருக்கு அளிக்கப்பட்டது.2023-06-1927 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் ~ சுப்ரபாரதிமணியன்சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என பலதளங்களிலும் 35 வருடங்களாக எழுதி வருபவர். அனைவராலும் அறியப்பட்டவர். இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது, தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர். திருப்பூர் பகுதியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, பெண்களைச் சுரண்டும் சுமங்கலி திட்ட ஒழிப்பு, நொய்யலை பாதுகாத்தல் போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளிலும் அக்கறை கொண்டவர். இவர் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடாத்திவருகிறார். 2023-06-1219 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesநுகம் ~ எக்பர்ட் சச்சிதானந்தம்எக்பர்ட் சச்சிதானந்தத்தின் எழுத்து அடுக்கி வைத்தார்போல் வரிகள், அளவெடுத்த வார்த்தைகள் , செறிவன உள்ளடக்கம் இறுதியில் உள்ளடங்கிய மவ்னம் என இவரது சிறுகதைகள் இருக்கும். தமிழின் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் 25 பேரில் இவர் பெயரும் அடங்கும். கிறித்துவ பின்புலம் கொண்டிருந்தாலும் இக்கதைகளில் வரும் ஒடுக்கப்பட்ட மனிதர்களின் வலிகள் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவை. இந்த மனிதர்களின் விசும்பல்கள் வழி உயர்ந்த மானுடம் பேசுகிறார் எக்பர்ட் சச்சிதான்ந்தன். 2023-06-0534 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesமுள் ~ சாரு நிவேதிதா / ~ Charu Niveditaசாரு நிவேதிதா தமிழின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர். மிக பரந்த வாசகர் பரப்பை கொண்டவர். அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்ற கருத்தை இவரது படைப்புகள் மையமாகக் கொண்டுள்ளன. அடுத்த மனிதரின் சுதந்திரத்தில் குறுக்கிடாமலும் அதே சமயம் நம்முடைய தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்காமலும் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை என்ற கருத்தை முன்வைப்பவை சாரு நிவேதிதாவின் படைப்புகள். இவரது நாவல் ஸீரோ டிகிரி, சுவிட்சர்லாந்தின் யான் மிஸால்ஸ்கி இலக்கிய விருதுக்கு 2013-ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ், 2001 - 2010 தசாப்தத்தின் இந்தியாவின் முதன்மை பத்து மனிதர்களில் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்தது.2023-01-2916 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesகாசி ~ பாதசாரி / KAsi ~ PathasAriஎழுத்தாளர் பாதசாரி அதிகம் எழுதியவர் இல்லை.  ஒரு சிறுகதை தொகுப்பும் ஒரு  கவிதை தொகுப்பும் மட்டுமே வெளி வந்திருக்கிறது. மிகக்  குறைவாக எழுதியும் கூட அவருடைய 'காசி' இல்லாத சிறந்த சிறுகதை பட்டியலே  இல்லை.2023-01-2246 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesகருப்பு ரயில் ~ கோணங்கி / Konangi ~ Karuppu Railகோணங்கி ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயற்பெயர் இளங்கோ. 1958-ஆம் ஆண்டில் நென்மேனி மேட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர். சுதந்திரப் போராட்ட வீரரான மதுரகவி பாஸ்கர தாஸ் பேரன் இவர். அப்பா சண்முகம், அண்ணன் ச. தமிழ்ச்செல்வன் ஆகியோர் எழுத்தாளர்கள். தம்பி முருகபூபதி தமிழின் முக்கியமான நாடகக் கலைஞர். கோவில்பட்டியில் வாழ்ந்து வரும் இவர் கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணி செய்தவர்.  கல்குதிரை என்ற சிற்றிதழின் ஆசிரியர். தமிழ் எழுத்தாளர் நகுலன், ருஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்து ஸ்பானிஷ் மொழியில் எழுதும் கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் ஆகியோருக்கு கல்குதிரை சிறப்பிதழ் கொணர்ந்தவர்.2023-01-1513 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஅந்நியர்கள் ~ ஆர். சூடாமணிஆர். சூடாமணி தமிழக எழுத்தாளர். உளவியல் எழுத்தாளர் எனப் புகழப்பட்ட இவர், ஏராளமான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதியிருக்கிறார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிக் கதிர், கல்கி, ஆனந்த விகடன் என்று எல்லாப் பத்திரிகைகளிலும் சூடாமணி எழுதியிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் சூடாமணி ராகவன் என்ற பெயரில் பல ஆங்கில ஆக்கங்களையும் எழுதியவர். இவரது ’அந்நியர்கள்’ மிக முக்கிய சிறுகதையாக கருதப்படுகிறது.2023-01-0922 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesவெயிலோடு போய் ~ ச.தமிழ்ச்செல்வன் / VeyiLodu Poiச.தமிழ்ச்செல்வன் 1954ல் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் பிறந்து, விருதுநகர் மாவட்டம் நென்மேனி மேட்டுப்பட்டியில் வளர்ந்து பள்ளிப்படிப்பை நிறைவு செய்து, கோவில்பட்டியில் கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் அஞ்சல் துறையிலும், இராணுவத்திலும், மீண்டும் அஞ்சல்துறையிலும்... என மாறி மாறி பணியாற்றியவர். படிப்பறிவை சமூகத்தில் பரவலாக்கும் நோக்கில் துவக்கப்பட்ட அறிவொளி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அதற்காக ஊதியமற்ற விடுமுறை எடுத்துக்கொண்டு முழுநேரமும் விழிப்பணர்வு சேவையாற்றினார். சேவைப் பணியிலும், இலக்கிய படைப்பிலும், தமுஎகச அமைப்பு பொறுப்புகளிலும் திறம்பட இயங்குவதறகாக அஞ்சலகபணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று முழு வீச்சில் இயக்கியவர். தற்போது தனது இணையர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் இரா.வெள்ளதாய் அவர்களுடன் சிவகாசியில் வசித்து வருகிறார். 2023-01-0813 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesகாலத்தின் விளிம்பில் ~ பாவண்ணன் / KAlathin Vilimbil ~PAvannanபாவண்ணன் 1980களில் எழுதவந்த சிறுகதை எழுத்தாளத் தலைமுறையைச் சேர்ந்தவர். இவருடைய முதல் சிறுகதை நா. பார்த்தசாரதியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தீபம் சிற்றிதழில் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்தது. சிற்றிதழ்களிலும் பெரிய இதழ்களிலும் தொடர்ந்து தரமான படைப்புகளை எழுதிவருகிறார். தமிழ்ச் சிறுகதைகளையும் தமிழில் வெளிவந்த பிறமொழிச் சிறுகதைகளையும் முன்வைத்து ’எனக்குப் பிடித்த கதைகள்’ என்னும் தலைப்பில் ’திண்ணை’ என்னும் இணைய இதழில் சிறுகதைகளில் பொதிந்திருக்கும் அழகியலையும் வாழ்வியலையும் இணைத்துப் பொருத்திப் புரிந்துகொள்ளும் விதமாக இவர் எழுதிய நூறு கட்டுரைகள் பரவலான வாசக கவனம் பெற்றவை. 2023-01-0124 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short StoriesS Ramakrishnan speech on Balzak • எஸ்.ராவின் உலக இலக்கிய பேருரை - பால்சாக்பால்சாக்கின் வாழ்வு மற்றும் படைப்பிலிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. யதார்த்தவாத எழுத்தின் நாயகராகக் கொண்டாடப்படும் பால்சாக் சிறுகதை, குறுநாவல் நாவல்கள் என எழுதிக் குவித்தவர்.2022-12-251h 45தமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesசித்தி ஒரு திருணையின் பூர்வீகம் ~ சுயம்புலிங்கம் / Oru Thirunaiyin poorvegam ~ Suyambulingamமுன்மாதிரி இல்லாத, எவரும் பின்தொடரவும் முடியாத ஒரு எழுத்து முறைக்குச் சொந்தக்காரர்  மு.சுயம்புலிங்கம். கோணங்கி கொண்டு வந்த ’கல்குதிரை ’-’சுயம்புலிங்கம் சிறப்பிதழ்’  மூலமாகவும் கி .ராஜநாராயணன்  தொகுத்த கரிசல் கதைத்திரட்டு  வழியாகவும் வெளி உலகுக்குப் பரவலாகத் தெரிய வந்தவர் சுயம்புலிங்கம். அவரே நடத்திவந்த ’நாட்டுப் பூக்கள்’ என்கிற கையெழுத்து இதழில் வெளிவந்திருந்த கவிதைகளையும் கதைகளையும்’ கல்குதிரை’ முதல் முதலில் அச்சில் கொண்டு வந்தபோது நவீன தமிழ் இலக்கிய உலகில் பெரும் அதிர்ச்சி அலைகள் உருவாகின.இதுவரை தமிழ்ச்சிறுகதை உலகம் கண்டிராத புதிய எழுத்து முறையை  மு. சுயம்பு லிங்கம் கைக் கொண்டிருந்தார்.அவருடைய படைப்புகளை ஊர்க்கூட்டம் என்கிற நூலாக முதலில் கொண்டு வந்தது சவுத்விஷன் புக் ஹவுஸ்2022-12-2502 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesசித்தி ~ மா. அரங்கநாதன் / Ma. Aranganathan ~ Chithiமா. அரங்கநாதன் கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் (திருவண்பரிசாரம்) கிராமத்தில் பிறந்தவராவார், பின்னர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவர் சங்க இலக்கியம், சைவ சித்தாந்தம், மேலைநாட்டு இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இவர் முன்றில் என்ற இலக்கியச் சிற்றிதழை நடத்திவந்தார், 1988 முதல் 1996 வரை 19 இதழ்களாக வெளிவந்த இந்த இதழ் சிற்றிதழ் வரலாற்றில் சிறந்த இடத்தை பெற்றது. இவரது படைப்புகள் பல, பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவரது 86 சிறுகதைளை சாந்தி சிவராமன் என்பவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். சென்னை மாநகராட்சியில் எழுத்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 50 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் வசித்து வந்தவர், அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்று, பின்னர் புதுச்சேரியில் வசித்துவந்தார்.2022-12-1810 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஇருளப்ப சாமியும் 21 ஆட்டுக்கிடாய்களும் ~ வேல ராமமூர்த்தி / Irulappa Samiyum 21 Attukkidaiykalum ~ Vela Ramamoorthyவேல ராமமூர்த்தி இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் மற்றும் நடிகராவார். தமிழ் மொழியில் எடுக்கப்படும் திரைப்படங்களில் அவ்வப்போது தோன்றி நடித்துவருகிறார். குற்றப்பரம்பரை வரலாற்றின் காலகட்டத்தை திரையில் கொண்டுவரும் பெரிய சவாலை பாலாவுக்காக திரைக்கதையாக இவர் எழுதிக்கொண்டிருக்கிறார். வேல ராமமூர்த்தி எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு வேல ராமமூர்த்தி கதைகள் என வெளியிடப்பட்டுள்ளது. 2022-12-1118 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesகாகிதக் குப்பைகள் ~ எல். லக்ஷ்மணன் / kAkitha kupaigaL ~ L.Lakshmananவானொலி நாடக ஆசிரியரான எல். லக்ஷ்மணன் , வெளிநாட்டு சிற்றலை வானொலிகளின் நேயரும் கூட. திருநெல்வேலி அகில இந்திய வானொலியில், இவரது நாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளன. இவரது இந்த சிறுகதை கனடா எம்டிஆர் எப்.எம் வானொலியில் ஒலிபரப்பாகியது இங்கு குறிப்பிடத்தக்கது. 2022-12-0218 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஒரு கப் காபி ~ இந்திரா பார்த்தசாரதிஇந்திரா பார்த்தசாரதி தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியாவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராகவும் இருந்தார். 2022-11-2622 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesபச்சை கனவு ~ லா. ச. ராமாமிர்தம்லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம். இவருடைய முன்னோர்கள்  திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய  பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற  பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2  வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்திலிருந்தே எழுதி வந்தவர். இவர், தனது 92வது பிறந்த நாளில் இறந்தார்.2022-10-2923 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesமூன்று நகரங்களின் கதை ~ க. கலாமோகன்க. கலாமோகன் இலங்கையில் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்கிறார். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் தனது ஆளுமையைச் செலுத்தி வருகிறார். இவரது கவிதைகள் டேனிசு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.கே.எல்.நேசமித்திரன் என்ற புனைபெயரிலும் எழுதியவர். புலம்பெயர முன்னர் கொழும்பில் பத்திரிகையாளராகப் பணியாற்றிவர். 1983 இல் இருந்து பிரான்சில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். பிரஞ்சுமொழியில் புலமையுடையவர். இவரின் சில கோட்டோவியங்கள் புகலிட இதழ்களில் வெளிவந்துள்ளன. எக்ஸில் சஞ்சிகையில் இவரின் பல கதைகள் வந்துள்ளன. அதே இதழில் பிரஞ்சுக் கவிதைகள் சிலவும் உள்ளன. ’மூன்று நகரங்களின் கதை’ மிக முக்கியச் சிறுகதையாகக் கருதப்படுகிறது.2022-10-2214 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஅரசனின் வருகை ~ உமா வரதராஜன்உமா வரதராஜன் (உடையப்பா மாணிக்கம் வரதராஜன்) கிழக்கிலங்கை, பாண்டிருப்பு, கல்முனை, இலங்கையில் பிறந்தவர். ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாசிரியர்களுள் ஒருவர். இவரது சிறுகதைகள் கணையாழி, கீற்று, களம், வீரகேசரி, இந்தியா டுடே ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கவிதை, விமர்சனம், பத்தியெழுத்து, ஆகிய பிரிவுகளில் ஈடுபட்டிருந்தாலும் முதன்மையாக சிறுகதையாசிரியராகவே அறியப்படுகின்றவர். தாத்தா (உடையப்பா), தந்தை (மாணிக்கம்) ஆகியோரின் பெயர்களின் முதலெழுத்துக்களை இணைத்து உமா வரதராஜன் ஆனவர். ‘அரசனின் வருகை’ வருகை சிறுகதை மிக முக்கியக் கதையாகக் கருதப்படுகிறது.2022-10-1516 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesமூங்கில் குருத்து ~ திலீப்குமார்திலீப்குமார், இலக்கிய திறனாய்வாளர், சிறுகதையாசிரியர். குஜராத்தி மொழியினை தாய் மொழியாகக் கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் பற்று கொண்டவர். சிறுகதை, இலக்கிய திறனாய்வு என இரு துறைகளிலும் எழுதிவருபவர். இவருடைய கதைகள் யதார்தத்தின் கனத்தினை வெளிப்படுத்துபவை. தெளிந்த பாத்திரப்படைப்பு, மெல்லிய நகைச்சுவை, அனுபவப்பூர்வமான வாழ்க்கையின் தேடல்கள் கொண்டவை இவருடைய கதைகள். 2002இல் இந்திய அரசாங்கம் வழங்கும் "பாஷா பாரதி" என்ற மதிப்புமிக்க விருதினைப் பெற்றவர். பல இந்திய இலக்கியத் திட்டங்களுக்கு ஆலோசகராகவும், சிறந்த மொழி பெயர்ப்புக்காக வழங்கப்பெறும் தேசிய விருதுக்கான தேர்வுக் குழுவில் உறுப்பினராகவும் பணிபுரிந்தவர். இவரது ’மூங்கில் குருத்து’ சிறுகதை மிக முக்கியக் கதையாக கருதப்படுகிறது.2022-10-0842 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesநீக்கல்கள் ~ சாந்தன்சாந்தனின் கதைகளில் சாந்தன்தான் கதாநாயகன். சாந்தனே கிருஷ்ணன். சாந்தனே ரமணன். சாந்தனுடைய படைப்புகளெல்லாம் சொந்த அனுபவங்களை அடித்தளமாய்க் கொண்ட  யதார்த்தமான முயற்சிகளாகையால், சாந்தனின் கதைகளுக்குத் தலைமையேற்க எந்தவொரு  கற்பனைப் பாத்திரத்துக்கும் தகுதியில்லை. இவரது ’நீக்கல்கள்’ சிறுகதையானது மிக முக்கியச் சிறுகதையாக கருதப்படுகிறது.2022-10-0112 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஇறகுகளும் பாறைகளும் ~ மாலன்மாலன் என அறியப்படும் மாலன் நாராயணன் நன்கு அறியப்பட்ட எழுத்தாளரும், ஊடகவியலாளரும்' சாகித்திய அகாதமி விருது பெற்றவரும் ஆவார். புதிய தலைமுறை என்னும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். முன்னதாக இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம் ஆகிய முன்னணித் தமிழ் இதழ்களிலும், சன் செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியராகவும் திசைகள் என்ற இணையம் வழிச் சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ’இறகுகளும் பாறைகளும்’ இவரது முக்கியச் சிறுகதையாகக் கருதப்படுகிறது.2022-09-2408 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesகாலமும் ஐந்து குழந்தைகளும் ~ அசோகமித்திரன்அசோகமித்திரன் தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931-ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்குப் பிறகு தனது 21-ஆம் வயதில் சென்னைக்குக் குடியேறினார் . இவருடைய எழுத்து எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது . தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.2022-09-2115 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஇன்னாட்டு மன்னர் ~ நாஞ்சில் நாடன்நாஞ்சில் நாடன் வீர நாராயணமங்கலத்தில் (கன்னியாகுமரி மாவட்டம்) பிறந்தார். நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். துணைவியார் பெயர் சந்தியா சுப்பிரமணியம். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார். நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல். இவரின் ’இன்னாட்டு மன்னர்’ சிறுகதை, மிக முக்கிய சிறுகதையாக கருதப்படுகிறது.2022-09-1720 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஇல்லாள் ~ கி. ராஜநாராயணன்கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா. 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. ’இல்லாள்’ சிறுகதை, இவரின் மிக முக்கியச் சிறுகதையாக கருதப்படுகிறது.2022-09-1514 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதங்க ஒரு ~ கிருஷ்ணன் நம்பிகிருஷ்ணன் நம்பி குமரி மாவட்டத்தில் அழகியபாண்டிபுரத்தில் பிறந்து பூதப்பாண்டி என்னும் ஊரில் வாழ்ந்தவர். இவரும் சுந்தர ராமசாமியும் இலக்கிய இரட்டையர் என்று அறியப்பட்டார்கள். 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி கிருஷ்ணன் நம்பிக்கு திருமணம் ஆயிற்று. மனைவி பெயர் ஜெயலட்சுமி. `நவசக்தி’யில் ஃபுருஃப் ரீடர் வேலை பார்த்தார். அப்போது ப. ஜீவானந்தம் அவர்களின் தொடர்பு கிடைத்தது . கிருஷ்ணன் நம்பிக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். கிருஷ்ணன் நம்பி வை. கோவிந்தனின் சக்தியில் `நாட்டுப்பாடல்கள்’ பற்றிய அவரது முதல் கட்டுரையை எழுதினார். 1950 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்துசிறுவர் பத்திரிகையான `கண்ணனில்’ தொடர்ந்து `சசிதேவன்’ என்கிற பெயரில் குழந்தைப் பாடல்கள் எழுதினார். கிட்டத்தட்ட சுமார் 35 பாடல்கள் கண்ணனில் வெளிவந்தன. அச்சில் வெளிவந்த நம்பியின் முதல் சிறுகதை `சுதந்திர தினம்’ (1951). இவரின் ’தங்க ஒரு’ சிறுகதை மிக முக்கியக் கதையாகக் கருதப்படுகிறது.2022-09-1016 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesடெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் ~ ஜி.நாகராஜன்ஜி. நாகராஜன் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர். ஜி.நாகராஜன் மதுரையில் செப்டெம்பர் 1, 1929 ஆம் தேதியில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பத்தில் ஏழாவது குழந்தை. தந்தை கணேச அய்யர் வழக்கறிஞர். பழனியில் வழக்கறிஞர் தொழிலை செய்துவந்தார். இவருக்கு இரு சகோதரர்கள், இரு சகோதரிகள் உண்டு. இவர் மதுரை அருகிலுள்ள திருமங்கலத்தில் இருந்த தாய்மாமன் வீட்டில் தங்கி, ஒன்பதாம் வகுப்பு வரை திருமங்கலம் பி.கே.என். பள்ளியில் படித்தார். பின் பழனியில் 10 மற்றும் 11 வகுப்புகளை முடித்தார். புகுமுக வகுப்பை மதுரைக் கல்லூரியில் படித்து பல்கலைகழக முதல் மாணவராக வெற்றி பெற்றார். இவரது ’டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்’ எனும் சிறுகதை, மிக முக்கியக் கதையாக கருதப்படுகிறது.2022-08-3113 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதனுமை ~ வண்ணதாசன்வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம். இவர் தமிழ்நாடு, திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. க. சிவசங்கரன் ஆவார்.இவர் தந்தையும் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. இவரது ’தனுமை’ எனும் சிறுகதை மிக முக்கியமான கதையாகக் கருதப்படுகிறது.2022-08-2717 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesபுற்றில் உறையும் பாம்புகள் ~ இராசேந்திர சோழன்தமிழ்ச் சிறுகதை மரபில் தன்னுடைய ‘எட்டு கதைகள்’ சிறுகதைத் தொகுப்பின்  மூலம் அதிர்வுகளோடு அடியெடுத்துவைத்த இராசேந்திர சோழன் ஒரு முக்கியமான  நிகழ்வு. மார்க்ஸியமும் நவீன அழகியலும் அபூர்வமாக இணைந்த முதல் தமிழ்  சாத்தியம் அவர். எட்டு கதைகளோடு வெளிவந்த இவரது இன்னொரு சிறுகதை நூலான  ‘பறிமுதல்’ முற்போக்கு இலக்கிய வகைமையில் முக்கியமான திருப்பத்தை  ஏற்படுத்திய தொகுப்பாகும். மொழியின் செம்மையும் விமர்சன வன்மையும் கொண்ட  அவருடைய படைப்புகள் மனிதர்களின் உளவியலுக்குள், குறிப்பாக ஆண் -பெண் உறவு  சார்ந்த பிரமைகள், அச்சங்கள், மயக்கங்களுக்குள் பயணிப்பவை. ’புற்றில் உறையும் பாம்புகள்’ பாம்புகள் சிறுகதை, இவரின் குறிப்பிடத்தக்க சிறுகதையாக அறியப்படுகிறது.2022-08-2010 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesநகரம் ~ சுஜாதாசுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிகையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர். இவரது ’நகரம்’ சிறுகதை மிக முக்கியமான கதையாகக் கருதப்படுகிறது.2022-08-1315 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesபைத்தியகார பிள்ளை ~ எம்.வி.வெங்கட்ராம்எம்.வி.வெங்கட்ராம் தமிழ் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கிய தமிழக எழுத்தாளர்.  16வது வயதில் முதன் முதலில் இவர் எழுதிய "சிட்டுக்குருவி" என்ற சிறுகதை மணிக்கொடியில் வெளியானது. 1993 ஆம் ஆண்டில் இவர் எழுதிய "காதுகள்" என்ற புதினத்திற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. "விக்ரஹவிநாசன்' என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். இவரது ’பைத்தியகார பிள்ளை’ மிக முக்கிய சிறுகதையாக கருதப்பபடுகிறது.2022-08-0635 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesசாமியார் ஜூவுக்கு போகிறார் ~ சம்பத்1941 திருச்சியில் பிறந்த சம்பத், வளர்ந்ததும் படித்ததும் டெல்லியில்.  டெல்லி ரயில்வேயில் உயரதிகாரியாகப் பணியாற்றிய அவருடைய தந்தை பணி  ஓய்வுபெற்று சென்னை திரும்பியபோது சம்பத்தும் தன் குடும்பத்துடன் சென்னை  வந்தார். எம்.ஏ. (பொருளாதாரம்) பி.எட். படித்திருந்த சம்பத், சென்னை  வாழ்வின் தொடக்கத்தில் ஆய்வு நிறுவனங்களிலும் சில தனியார் நிறுவனங்களிலும்  பணியாற்றினார். கடைசி சில ஆண்டுகள், படைப்பாளியிடம் அவனுடைய முழு  நேரத்தையும் கேட்டு நிற்கும் எழுத்தின் குரலுக்குக் கட்டுப்பட்டு முழுநேரப்  படைப்பாளியாகச் செயல்பட முடிவெடுத்தார். (சி.சம்பத், இந்து தமிழ் திசை)2022-07-3046 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesகாடன் கண்டது ~ பிரமிள்பிரமிள்  என்ற பெயரில் எழுதிய தருமு  சிவராம், இலங்கையில் பிறந்தவர். தமிழகத்து எழுத்தாளர். தமிழின் முதன்மையான  கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர். புதுக்கவிதை முன்னோடிகளுள்  முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவரின் ’காடன் கண்டது’ கண்டது மிக முக்கியமான சிறுகதைகயாக கருதப்படுகிறது.2022-07-2321 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் இலக்கியப் பேரவை ~ ஜெ.ஜெ.சித்ராதேவிதமிழ் இலக்கியப் பேச்சாளரான ஜெ.ஜெ.சித்ராதேவி தமிழ் மீதும். இசை மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மதுரை, சென்னை அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராகவும், தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவரது “தமிழ் இலக்கியப் பேரவை” மிக முக்கியமான சிறுகதையாகும். 2022-07-1618 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesசிவப்பாக உயரமாக மீசை வச்சுக்காமல் ~ ஆதவன்ஆதவன் (Aadhavan) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவரது இயற்பெயர் கே.எசு.சுந்தரம் ஆகும். 1942 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 21 ஆம் நாள் இவர் பிறந்தார். அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ்ச் சிறுகதை உலகில் பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தினார். முதலில் இரவு வரும் என்ற சிறுகதை நூலுக்கு 1987 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது ஆதவனுக்கு வழங்கப்பட்டது.2022-06-0435 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதாலியில் பூச்சூடியவர்கள் ~ பா. செயப்பிரகாசம்பா. செயப்பிரகாசம் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். குறிப்பாகச் சிறுகதைகளில் இவரது பங்களிப்பு தனித்துவமானது. ஒரு ஜெருசலேம், காடு ஆகிய தொகுப்புகள் முக்கியமானவை. மனஓசை இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்துள்ளார். சூரியதீபன் என்னும் புனைபெயரிலும் எழுதி வருகிறார். மூன்றாவது முகம், இரவுகள் உடைபடும் ஆகிய தொகுப்புகள் சூரியதீபன் என்னும் பெயரில் வெளிவந்துள்ளன. 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மாணவர் தலைவர்களுள் ஒருவராக விளங்கினார். 2022-05-2933 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesபிரசாதம் ~ சுந்தர ராமசாமிநவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் சுந்தர ராமசாமி. இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். மார்க்சியக் கண்ணோட்டத்தில் தொடங்கிய இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கி வர்க்கம்) இறுதியாக பட்டறிவுத் திறனாய்வு சார்ந்த உய்யநிலை நடப்பியல் (Empiricist Critical Realism) நோக்கில் (ஜகதி) கால்கொண்டன எனலாம். இடைபட்ட காலத்தில் புத்தியலின் (Modernism) பலவெளிகளை படைத்தாலும் அவ்வப்போது வியன்புனைவிலும் (இருக்கைகள் போன்றன) திளைத்துள்ளார். (Source: Wikipedia)2022-05-2928 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஒரு ராத்தல் இரைச்சி ~ நகுலன்டி. கே. துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன் பிறந்தது தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் ஆனாலும் இறுதிவரை வாழ்ந்தது கேரளத்தின் திருவனந்தபுரத்தில். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் முதுகலையும் ஆராய்ச்சிப் பட்டமும் பெற்றவர். திருவனந்தபுரம் இவானியர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2022-05-1607 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesகோமதி ~ கி. ராஜநாராயணன்கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.2022-05-0820 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesராஜா வந்திருக்கிறார் ~ கு. அழகிரிசாமிகு. அழகிரிசாமி தமிழின் குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்த அழகிரிசாமி, சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார்.2022-05-0132 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesபாயசம் ~ தி. ஜானகிராமன்தி. ஜானகிராமன் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், தேவக்குடியில் பிறந்தவர். புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜா. என்றும் அழைக்கப்படுபவர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காகத் தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ் பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை எழுதியவர். 2022-04-2418 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதீட்டு ~ அருண்.மோஅருண். மோவின் இந்த படைப்பு ஊடகத்துறை உட்பட அனைத்து தரப்பினரையும் கேள்விக்குள்ளாக்குகிறது. ஒரு சிறிய சிகப்பு துணிக்கு இவ்வளவு பிரச்சனையா? ஒரு வேலை அது இருக்கும் இடம் தான் பிரச்சனையாகியிருக்குமோ? விரிவாக கேளுங்குள் ‘தீட்டு’ சிறுகதையை, நிச்சயம், நீங்களும் கொஞ்சம் யோசிப்பீர்கள்.2022-04-2431 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesகுருபீடம் ~ ஜெயகாந்தன்ஜெயகாந்தன் இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் எனப் பரந்து இருக்கின்றது. 2022-04-2219 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesகவந்தனும் காமனும் ~ புதுமைப்பித்தன்புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும்,  இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை  நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன.  அதுமட்டுமின்றி, 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது2022-04-2106 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஞானப்பால் ~ ந. பிச்சமூர்த்திந. பிச்சமூர்த்தி அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.2022-04-1714 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesவசுமதி வா போகலாம் ~ சந்திர கிருஷ்ணன்பேரா. சந்திர கிருஷ்ணன் தனித்துவமான எழுத்துக்கு சொந்தக்காரர். சிறு வயதில் நம்மோடு ஓடியாடி விளையாடியவர்களை பெரியவர்கள் ஆனபிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்க்கும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சியே வேறு. அதுவும் அவர்கள் பெண்கள் எனில், இன்னும் கூடுதல் சந்தோஷம். ஆனால் அவர்கள் வாழ்க்கை குடும்ப சூழ்நிலையால் புரட்டிப் போடப்பட்டிருக்கும் போது இந்த சந்திப்பு நிகழ்ந்தால்?! மிக நேர்த்தியாக அதை இந்த ”வசுமதி வா போகலாம்“ சிறுகதையில் சந்திர கிருஷ்ணன் பதிவு செய்துள்ளார். 2022-04-1010 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஒரு வார்த்தை ~ சிவசங்கரிசிவசங்கரி நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். 1993 இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வெளியிட்டுள்ளார். இவரது 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள், 7 கட்டுரைத் தொகுப்புக்கள், 2 வாழ்க்கைச் சரிதங்கள் ஆகியவை வெளியாகியுள்ளன.2022-04-0927 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஇடுக்கி ~ முத்துராசா குமார்தற்காலத் தமிழிலக்கியத்தின் நம்பிக்கைக்குரிய இளம் கவிஞர்களில் ஒருவர் முத்துராசா குமார். 'பிடிமண்', 'நீர்ச்சுழி' என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள் மூலம் தனித்த அடையாளத்தை உருவாக்கியிருந்த முத்துராசா, 'ஈத்து' என்ற சிறுகதைத் தொகுப்பு மூலம் இப்போது சிறுகதையாசிரியராகவும் பரிணமித்திருக்கிறார். (விகடன் டாட் காம்)2022-04-0725 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஎன்னை மன்னித்துக்கொள் தாவீது ~ அகரமுதல்வன்பிபிசி தமிழோசையைக் கேட்டவர்களுக்கு நிச்சயம் இந்த கதை நெருக்கமானதாக இருக்கும். “என்னை மன்னித்துக்கொள் தாவீது” சிறுகதையின் மையக் கதாப்பாத்திரத்தின் பெயரே பிபிசி. அதற்கான காரணத்தினை அறிந்துகொள்ள அகரமுதல்வன் எழுதிய இந்த சிறுகதையை முழுமையாகக் கேளுங்கள். ஈழத்தின் போர்ச் சூழலை நேரடியாக நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார் கதாசிரியர்.2022-03-1937 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesபிரபஞ்ச ஞானம் - மௌனிமௌனி (இயற்பெயர் - மணி, சூலை 27, 1907 - சூலை 6, 1985) ஒரு புகழ் ஈட்டிய தமிழ் எழுத்தாளர். இவர் மணிக்கொடி இதழில் எழுதத் துவங்கி, கசடதபற இதழ் வரை கதைகள் எழுதியவர். கணிதத்தில் பட்டம் பெற்றிருந்த அவருக்கு இசையிலும் மெய்யியலிலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. கதாபாத்திரங்களின் அன்றாட உலகை விவரிப்பதை விடவும் அவர்களது மனவுலகின் அரிய தருணங்களை வெளிப்படுத்துவதே இவரது எழுத்து நடையின் சிறப்பு. இவர் 24 கதைகள் மட்டுமே எழுதியுள்ளார். 2022-03-1116 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesகனகாம்பரம் - கு.ப.ராகு. ப. ரா என்று பரவலாக அறியப்பட்ட கு. ப. ராஜகோபாலன் (ஜனவரி 1902 - ஏப்ரல் 27, 1944) ஒரு தமிழ் எழுத்தாளர். சிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலவகைப் படைப்புகளை அளித்தவரெனினும் அவரது சிறுகதைகளின் சிறப்பினால் “சிறுகதை ஆசான்” என்று அழைக்கப்படுகிறார்.2022-03-0411 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesமகாராஜாவின் ரயில் வண்டி - முத்துலிங்கம்1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.2022-02-2520 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesமனுசன மாத்தும்டா...மனுசனா மாத்தும்டா... ~ வாசுதேவன் அருணாச்சலம்ஒரு நாவல் என்னவெல்லாம் செய்யும் வாசகனை, அதே போல் அந்த எழுத்தாளனையும் என்ன செய்யும் என்பதற்கு இந்த “மனுசன மாத்தும்டா...மனுசனா மாத்தும்டா...” எனும் திரு.வாசுதேவன் அருணாச்சலம் எழுதிய சிறுகதை நல்ல உதாரணம்.2022-02-2010 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஒரு குவாட்டரும் அரைப் பிளேட் மட்டன் பிரியாணியும் ~ வாசுதேவன் அருணாச்சலம்கிராமங்களில் நாட்டார் வழிபாட்டினை இந்த கோணத்திலும் பதிவு செய்ய முடிமா? என்பதற்கு இந்த “ஒரு குவாட்டரும் அரைப் பிளேட் மட்டன் பிரியாணியும்” சிறுகதை ஒரு உதாரணம். எழுதிய திரு.வாசுதேவன் அருணாச்சலம் அவர்களுக்கு சபாஷ்2022-02-2019 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஇழைகள் சிரித்தால் - பாதசாரிஎழுத்தாளர் பாதசாரி நிறைய கதைகள் எழுதியிருந்தாலும் 'காசி' என்ற ஒரு சிறுகதையின் மூலமே புனைவு எழுத்தாளராக அறியப்பட்டார். அந்தக் கதையின் வழியாகவே இன்றுவரை புனைவு எழுத்தாளராக இருக்கின்றார்.2022-02-1838 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesகொரோனா காலப் பயணம் ~ தங்க.ஜெய்சக்திவேல்தொலைத்தூர வானொலிகளைக் கேட்பதற்காக இவ்வளவு சிரமங்களை யாரேனும் எடுப்பார்களா?  ஆனால் இவர் கொரோனா காலத்தில் சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்திற்கு எப்படி சென்றார் என்பதே கதை. 2022-02-1642 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesகறியும் சோறும் - விழி பா. இதயவேந்தன்விழி பா. இதயவேந்தன் அவர்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுநாவல், வீதிநாடகம் என்று பன்முகம் கொண்ட எழுத்தாளர். இவரின் படைப்புகள் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட இதழ்களில் வெளி வந்துள்ளது. இந்தியா டுடே, கணையாழி, தினமணி கதிர், அரங்கேற்றம், தினப்புரட்சி, நான்காவது பரிமாணம் (கனடா), சதங்கை, இந்தாம் (மின்னிதழ்), மின்னம்பலம் (இணைய இதழ்) போன்று பல்வேறு தளங்களில் எழுதியுள்ளார். 2022-02-1134 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesபொன்னுத்தாயி - பாமாபாமா, தலித் இலக்கியம் படைக்கும் குறிப்பிடத்தக்க முன்னணி எழுத்தாளர் ஆவார். இவர் 1992 இல் எழுதிய தன்வரலாற்றுக் கூறுகளுடன் எழுதிய கருக்கு என்னும் புதினம் புகழ் பெற்றது. அதில் இவர் தலித் மக்கள் மொழியைப் பயன்படுத்தி எழுதியது புதிய பாதை வகுத்தது என கருதப்படுகின்றது. கன்னியராகிப் பின்னர் அப்பொறுப்பிலிருந்து விலகி ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவரது கருக்கு புதினத்தை லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 2000 ஆண்டின் 'கிராஸ் வேர்ட்புக்' விருதைப் பெற்றிருக்கிரார்.2022-02-0438 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesவிளக்கு பூச்சி - கண்மணி குணசேகரன்கண்மணி குணசேகரனின் இயர்பெயர் குணசேகரன். விருத்தாச்சலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் “தலைமுறைக் கேடயம்”, “காலடியில் குவியும் நிழல் வேளை” எனும் கவிதைத் தொகுப்புகளையும், சிறுகதைகள் மற்றும் புதினங்களையும் எழுதியுள்ளார். 2007 ஆம் ஆண்டிற்கான சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருதினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய “நடுநாட்டுச் சொல்லகராதி” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 2022-01-2823 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesகோவம் - உஞ்சை ராசன்யாருக்குத்தான் கோவம் வராது. கோவம் மனிதனின் இயற்கையான குணங்களில் ஒன்று. கோவத்திற்கு பல்வேறு அர்த்தங்கள் இருக்கும். இந்த உஞ்சை ராசனின் கோவமும் அர்த்தமுள்ளதா, என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.2022-01-2114 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesவருகை - உமா மகேஸ்வரிஉமா மகேஸ்வரி தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். இவர் தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று விரிவாகப் பயணம் செய்பவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்பொழுது, கணவர், குழந்தைகளுடன் ஆண்டிபட்டியில் வசிக்கிறார்.2022-01-1412 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesபஞ்சாயத்து - தமயந்திஇயக்குநர், பாடலாசிரியர், எழுத்தாளர் எனப் பல முகங்களைக் கொண்ட படைப்பாளி தமயந்தி. புதிய திரைப்படத்துக்கான கதை விவாதம், புதிய படங்களுக்கான பாடல் எழுதும் பணிகளுக்கு மத்தியில் நாவல் ஒன்றையும் முடித்துள்ளார். இந்த பஞ்சாயத்து அவரது முக்கியமான சிறுகதைகளில் ஒன்றாகும்.2022-01-0708 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஉக்கிளு - குமார செல்வாகதையை எப்படியெல்லாம் எடுத்துச் செல்ல முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமான சிறுகதை. கதைமாந்தர்கள் நம்மோடு இதிலும் இணைந்தே பயணிப்பது இந்த ’உக்கிளு‘ சிறுகதையின் கூடுதல் சிறப்பு.2021-12-3146 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesகுருவனைப் பிடிக்க பெண் தெய்வம் கூறிய யோசனை - ஜனகபிரியாகதையின் தலைப்பே கேட்கவர்களுக்கு ஒரு வித ஆர்வத்தினை தூண்டும். அதற்கு சற்றும் குறைவில்லாமல் இந்த ‘குருவனைப் பிடிக்க பெண் தெய்வம் கூறிய யோசனை’ சிறுகதையில் ஜனகபிரியா அருமையாக எழுதியுள்ளார்.2021-12-2410 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesசாயும்காலம் - ஜி.முருகன்காலங்கள் தான் எத்தனை எத்தனை வகைகளாக பரவி இருக்கிறது. எல்லா காலங்களையும், எல்லா நேரத்திலும் ஒரு சேர அனுபவிக்க முடிவதில்லை. இந்த சாயும்காலம் சிறுகதையும் அதைப் போன்ற ஒன்றே.2021-12-2409 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஉன்னிகள் - பெருமாள் முருகன்கொங்கு மண்டலத்தின் மக்களை இவர் அளவுக்கு எழுத்தில் பதிவு செய்தவர் யாரும் இல்லை என்றே கூறலாம். அதற்கு உதாரணமான சிறுகதை தான் இந்த உன்னிகள்.2021-12-1717 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesசுமைகள் - அரசு மணிமேகலைஇந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் ஏதேனும் ஒரு சுமை இருக்கத்தான் செய்யும். அரசு மணிமேகலையின் இந்த சுமைகள் சிறுகதை அதில் ஒரு விதம்.2021-12-1017 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesபாயம்மா - பிரபஞ்சன்பிரபஞ்சனின் எழுத்தின் வசீகரம் படிப்பவர்களை மட்டுமல்ல, கேட்பவர்களையும் வேறு ஒரு தளத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை. அதற்கு இந்த பாயம்மா சிறுகதை ஒரு உதாரணம்.2021-12-0315 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesகடவுளும் கந்தசாமி பிள்ளையும் - புதுமைப்பித்தன்கடவுள் பூமிக்கு வந்தால் என்னவாகும் என்ற இந்த வடிவத்தினை மிக அழகாக, நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறார் புதுமைப்பித்தன்.2021-11-2637 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesநெஞ்சுடையான் - பஞ்ச் தர்மாமனிதர்களில் தான் எத்தனை எத்தனை வகை. அன்பு, பாசம் எல்லாம் எல்லோரிடத்திலும் சமமாகத் தான் இருக்கிறதா? இந்த கதையைக் கேளுங்கள், அவ்வளவு அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார் பஞ்ச் தர்மா.2021-09-2414 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesமனவெளி நாடகம் - ரமேஷ் பிரேம்பின்நவீனத்துவ அணுகுமுறை, இலக்கியக் கோட்பாடுகள், படைப்புகள் ஆகியவற்றைத்  தமிழில் அறிமுகம் செய்து, அது குறித்த விவாதங்களை உருவாக்கி, தமிழ்  இலகக்கிய அறிவுலகப் போக்கை ஆக்கபூர்வமானதாக மாற்றியவர்களுள் குறிப்பிடத்  தக்கவர்கள் பிரேம்-ரமேஷ். பின்நவீனத்துவ படைப்பிலக்கியவாதிகளாகவும்  விமர்சகர்களாகவும் அறியப்படுபவர்கள். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள்,  நாடகங்கள், விமர்சனக் கட்டுரைகள் இவர்கள் இலக்கியப் பங்களிப்புகள்.  புதுச்சேரி அரசின். ”கம்பன் புகழ் விருது” இரண்டு முறை இவர்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது. 2007 முதல்  இருவரும் இணைந்து எழுதுவதை விடுத்து  தனித்தனியே தமது எழுத்துகளை அளித்துவருகின்றனர்.2021-09-2426 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesமூக்குப்பொடி - பார்த்தசாரதிவயதான தாத்தா பாட்டியின் கதை. என்ன ஒரு அன்பு, அத்தனை அன்பினையும் கொட்டி எழுதப்பட்ட இந்த பார்த்தசாரதியிள் கதையைக் கேளுங்கள், உங்களுக்கும் அன்பு தொற்றிக்கொள்ளும்.2021-09-1715 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesபெயிண்டர் பிள்ளையின் ஒரு நாள் காலைப்பொழுது - உதயசங்கர்கா. உதயசங்கர் சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம், கட்டுரை போன்றவற்றை எழுதி வருகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் மாநில துணைப் பொதுச்  செயலாளராக செயலாற்றி வருகிறார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள்  சங்கத்தின் மாநிலத்தலைவராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்.2021-09-1710 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesபொரி உருண்டை - பார்த்தசாரதிவாழ்க்கை உன்னதாமான தருணங்களை கொண்டுள்ளது. அதனை நாம் பார்க்கும் விதத்தில் தான் உள்ளது. பார்த்தசாரதியின் கதைகள் அதனை நமக்கு மீட்டுருவாக்கம் செய்கின்றன.2021-09-1008 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesகாவடியாட்டம் - யூமா வாசுகிதி. மாரிமுத்து  நுண்கலையில் பட்டயக் கல்வி பெற்றுள்ளார். இவர் “யூமா. வாசுகி” எனும் புனைப்பெயரில் எழுதி வருகிறார். ”உனக்கும் உலகுக்கும்”, “தோழமை இருள்”, “அமுத பருவம்” எனும் கவிதை  நூல்களையும், “உயிர்த்திருத்தல்” எனும் சிறுகதைப் படைப்பையும்,  “மோர்னிங்  திக்கெட்ஸ்” எனும் ஓவியப் படைப்பையும் வழங்கியிருக்கிறார். இவர் எழுதிய "ரத்த உறவு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.2021-09-0316 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஒரு குறிப்பிட்ட சந்தர்பத்தில் - சு.சமுத்திரம்மன நல மருத்துவர் எப்படி வைத்தியம் பார்ப்பார் என அறிந்துகொள்ள வேண்டுமா, இந்த கதையைக் கேளுங்கள். நீங்களே ஒரு மருத்துவரை பார்த்துவந்த அனுபவத்தினைக் கொடுக்கும் கதை தான் இந்த சு.சமுத்திரம் எழுதிய ‘ஒரு குறிப்பிட்ட சந்தர்பத்தில்’ 2021-08-2427 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesஇனிமே வராதே - மோ. கணேசன்அம்மா, அப்பாவின் மீது வைத்துள்ள அன்பு, திருமணம் ஆனபின்பு மகன்களின் கையறுநிலை, கொரோனா காரணமாக வேலையிழந்த மகன், என கதை சமகாலத்தினை மிக அழகாக பதிவு செய்து செல்கிறது. ‘இனிமே வராதே’ சிறுகதை மோ. கணேசனின் சிறப்பான எழுத்துக்கு சான்று. கூடுதலாக அவர் எழுதிய நாவலின் ஒரு பகுதியும் இதில் வாசிக்கப்பட்டுள்ளது.2021-08-0129 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesகாரல் மார்க்சும் தாணு ஆசாரியும் - தமிழவன்நம் கிராமங்களில் தான் எத்தனை வகையான மனிதர்கள். அவர்களை கொஞ்ச நேரமேனும் நீங்கள் அவதானித்து பார்த்துள்ளீர்களா? அப்படி இல்லை எனில் இனிமேலாவது பாருங்கள். ‘காரல் மார்க்சும் தாணு ஆசாரியும்’ அப்படியாக தமிழவன் பார்த்ததன் விளைவே. கேளுங்கள், நிச்சயம் நீங்கள் இனி  அவதானிப்பீர்கள்.2021-07-3011 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesகணினி என் தோழன் - வாதூலன்வங்கியில் கணினி வந்த புதிதில் என்னவெல்லாம் நடந்தன என்பதை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் கணினி என் தோழன் சிறுகதையில்  வாதூலன். உங்களுக்கும் பிடிக்கும், கேளுங்கள்.2021-07-1918 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesரகசிய வேட்கை - சி.மோகன்சி.மோகன் அவர்களின் எழுத்து தெளிந்த நீரோடை. படிப்பவர்களை கட்டிப்போடக் கூடியது. அந்த வகையில் இந்த ரகசிய வேட்கை சிறுகதை அதற்கு ஒரு உதாரணம்.2021-07-1918 minதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesதமிழ் சிறுகதைகள் Tamizh Short Storiesகிணறு - எஸ்.சுந்தர்ராஜன்ஒரு கிணறு நகரத்து ஆசாமிக்கு எப்படி முக்கியமானதாக இருக்கிறது. தண்ணீர் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை மிக அழகாக கூறியுள்ளார். மிகவும் சுவாரஷ்யமாக எஸ்.சுந்தர்ராஜன் எழுதியுள்ளார்2021-07-1212 min